Shadow

Author: Inbaaraja

பகலறியான் விமர்சனம்

பகலறியான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் தான் காதலித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓரிரவில் ஓடிப் போக தயாராகிறான். ஓடிப் போன தன் தங்கையை தன் சகாக்களுடன் தேடி அலைகிறான் அண்ணன். இந்த நாயகன் கதாபாத்திரமும் அண்ணன் கதாபாத்திரமும் தவறான தொழில் செய்பவர்கள் என்பதால், தொழில் சார்ந்த பகையும் அந்த இரவில் இருவருக்கும் தொல்லை கொடுக்க மேற்கொண்டு நடந்தது என்ன..? என்பது தான் பகலறியானின் கதை.இப்படத்தின் கதையை வேறு மாதிரியும் கூற முடியும். சற்று ஆழமாகப் பார்த்தால் அதுதான் இப்படத்தின் கதை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதைத் தான் இயக்குநர் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கிறார் என்பதால் மேற்கொண்டு அது குறித்து மேலதீக தகவல்கள் கொடுக்க முடியவில்லை. கதைகளில் ட்விஸ்ட் இருக்கலாம். ஆனால் கதையவே ட்விஸ்ட் ஆக கூறும் முதல்படம் நான் பார்த்த வரையில் இதுதான்.படத்தின் கடைசி 20 நிமிடம் வரை படத்தின் கதை இதுதான் என்பது புரியாது. ஒரு காதல் ஜோடி ஓடப் பார்க்கிறது....
PT சார் விமர்சனம்

PT சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை ஒரு உடற்கல்வி ஆசிரியர் எதிர்த்து நீதி வாங்கித் தந்தால் அதுதான் இந்த “PT சார்” திரைப்படம்.ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தி கல்வித் தந்தை என்று போற்றப்பட்டு வருபவர் தாளாளர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கனகவேல் (ஹிப் ஹாப் ஆதி) எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியையான வானதி (காஷ்மீரா) மீது காதல் கொள்வது எந்த வம்பு தும்புக்குள்ளும் வராது என்பதால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தெரியும்படி தைரியமாக காதலித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிப்பவரும் தன் பள்ளிக்கு அருகே அதே நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிப்பவருமான நந்தினி (அனிகா சுரேந்திரன்) பள்ளியுடன் தொடர்புடைய ஒரு பாலியல் அத்துமீறல்...
முதன்முதலாக அஞ்சாமை படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளைப் பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

முதன்முதலாக அஞ்சாமை படத்தின் ஒட்டுமொத்த உரிமைகளைப் பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

சினிமா, திரைச் செய்தி
தமிழகத்தில் செயல்பட்டு வந்த மருத்துவ தேர்வு கல்வி முறையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிலையங்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் ஏற்பட்டன.நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட அவதிகளை மையப்படுத்தி இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘அஞ்சாமை’. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார்.இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ’அஞ்சாமை’ படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்இதனை திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார...
சாமி சாமியை ஈடு செய்யுமா “சூடானா..” பாடல் – புஷ்பா 2 தி ரூல் செகண்ட் சிங்கிள்

சாமி சாமியை ஈடு செய்யுமா “சூடானா..” பாடல் – புஷ்பா 2 தி ரூல் செகண்ட் சிங்கிள்

சினிமா, திரைச் செய்தி
புஷ்பாராஜை சந்திக்கும் ஸ்ரீவள்ளி...ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்திருக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ இப்போது வெளியாகியுள்ளது!மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான 'புஷ்பா...புஷ்பா' பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் இரண்டு மடங்காக்கியுள்ளது. 'புஷ்பா: தி ரூல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சூடானா...(கப்புள் பாடல்)' அறிவிப்பு ராஷ்மிகா இருக்கும் புரோமோவுடன் வெளியாகியுள்ளதால் ரசிகர்களை உற்சாகமாகியுள்ளனர்.படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஷ்மிகா, ஸ்ரீவள்ளியாக மாறும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் இந்த புரோமோவை படக்குழு வெளிய...
பார்க்கிங் திரைக்கதைக்கு கிடைத்த மரியாதை

பார்க்கிங் திரைக்கதைக்கு கிடைத்த மரியாதை

சினிமா, திரைச் செய்தி
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் பெறும். தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் அதன் நல்ல திரைக்கதை மூலம் இதை நிரூபித்துள்ளது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் நடிகர் ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' திரைப்படம். இந்தப் படத்தின் திரைக்கதை தற்போது சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் (ஆஸ்கர் விருதுகள்) ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் ஆய்வு நோக்கங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய 'பார்க்கிங்' படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ். சினிஷ் தயாரித்துள்ளனர்....
”லவ் யூ புஜ்ஜி” சொன்ன பிரபாஸ்

”லவ் யூ புஜ்ஜி” சொன்ன பிரபாஸ்

சினிமா, திரைச் செய்தி
ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான 'கல்கி 2898 கி.பி' படத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி ஹீரோவான 'புஜ்ஜி' என்ற பெயரிடப்பட்ட, எதிர்கால வாகனத்தின் அசத்தலான டீஸரைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள், இறுதியாக மே 22, 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழாவில் நிகழ்வில் 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை - நடிகர் பிரபாஸ் ஒரு வீடியோவாக வெளியிட்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்த தருணங்களை நினைவு கூர்ந்து, பிரபாஸ் முழு மனதுடன், ‘லவ் யூ,...
மாற்றுத் திறனாளி குழந்தையின் உலகத்தைப் பேசும் “பிள்ளையார் சுழி”

மாற்றுத் திறனாளி குழந்தையின் உலகத்தைப் பேசும் “பிள்ளையார் சுழி”

சினிமா, திரைச் செய்தி
"டபிள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீரஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள "பிள்ளையார் சுழி" ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். தீரஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்."போதை எறி புத்தி மாறி" மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த "டபிள் டக்கர்" போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீரஜ், "பிள்ளையார் சுழி" யிலும் பார்வையாளர்களை மீண்டும் கவருவார் என்ற...
இனிதே நடந்த முடிந்த “சைரன்” பட இயக்குநரின் திருமணம்

இனிதே நடந்த முடிந்த “சைரன்” பட இயக்குநரின் திருமணம்

சினிமா, திரைச் செய்தி
'சைரன்' படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் - ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற 'சைரன்' படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் - ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது.அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...நடிகர் ஜெயம் ரவி, அவரின் மனைவி ஆர்த்தி ரவி, நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி,  தயாரிப்பாளரும் எடிட்டருமான மோகன், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், நடிகர் சதீஷ், நடிகரும் இயக்குநருமான அழகம்பெருமாள், எடிட்டர் ரூபன்,  இன்று நேற்று நாளை ரவிக்குமார், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் விருமாண்டி, இயக்குநர் எம்.ஆர்.மாதவன், இயக்குநர் கிஷோர் ராஜ்குமார், ந...
8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் உடன் இணையும் சித்தார்த்

8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் உடன் இணையும் சித்தார்த்

சினிமா, திரைச் செய்தி
வழக்கத்திற்கு மாறான கதைகள் மற்றும் காலத்தைத் தாண்டிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நடிப்பில் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே! திறமையான பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனைப் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. பாலிவுட்டில் 'ரங் தே பசந்தி'மூலம் அழியாத முத்திரையை பதித்தாலும், தெலுங்கில் 'பொம்மரில்லு' மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தாலும் அல்லது தமிழ்த் துறையில் பல்வேறு வகைகளில் ஜொலித்தாலும், சித்தார்த் சினிமா மற்றும் நடிப்பு மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படமான 'சித்தா'ரசிகர்களின் இதயங்களை வென்றது. இப்போது, நடிகர் சித்தார்த் அவரின் நாற்பத...
தன் தந்தையை தேடிச் செல்லும் Garfieldன் பயணம்

தன் தந்தையை தேடிச் செல்லும் Garfieldன் பயணம்

சினிமா, திரைச் செய்தி
Sony Pictures Entertainment India தயாரிப்பில்  Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield .சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1 Garfield The Movie (2004) 2 Garfield : A Tail of 2 Kitties (2006) 3 Garfield Goes Real (2007) 4 Garfield 's Fun Fest (2008) 5 Garfield 's Pet Force (2009)Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு!Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!. தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie என்ற ஒரு நாய் , உற்ற நண்பன்! இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்! ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது !அந்த சந்திப்பு, Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகின்றன ! Chris Pratt , Samue...
என் நடிப்புத் திறமைக்கு பட்டை தீட்டும் அனுபவத்தை ‘தலைமை செயலகம்’ கொடுத்தது – நடிகர் நிரூப் நந்தகுமார்

என் நடிப்புத் திறமைக்கு பட்டை தீட்டும் அனுபவத்தை ‘தலைமை செயலகம்’ கொடுத்தது – நடிகர் நிரூப் நந்தகுமார்

சினிமா, திரைச் செய்தி
தனது வசீகரிக்கும் தோற்றத்தோடு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் நடிகர்கள் பார்வையாளர்களின் மனதில் தனி இடம் பிடிப்பார்கள். இதில் நடிகர் நிரூப் நந்தகுமாரும் ஒருவர். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ’தலைமைச் செயலகம்’ வெப்சீரிஸில் நடித்திருக்கும் நிரூப்பின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.இந்த வெப் தொடரின் ஒரு பகுதியாக இருந்ததன் சிறந்த அனுபவம் பற்றி நடிகர் நிரூப் பகிர்ந்து கொண்டதாவது, "அனுபவம் வாய்ந்த இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் ஹரிஹரன் என்ற சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்தது என் நடிப்புத் திறமையை இன்னும் பட்டைத் தீட்டும்படியாக இருந்தது. வெறும் கதாபாத்திரமாக மட்டுமே இதை அணுகாமல் நடிப்பிற்கு சவால் விடும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதியின் நுணுக்கங்களை தேடித்தேடி கற்றுக் கொண்டேன். என் நடிப்பைப் பார்த்த பலரும் ...
கண்ணப்பா படத்தின் டீஸர் வெளியீட்டிற்காக கேன்ஸில் முகாமிட்ட விஷ்ணு மஞ்சு

கண்ணப்பா படத்தின் டீஸர் வெளியீட்டிற்காக கேன்ஸில் முகாமிட்ட விஷ்ணு மஞ்சு

சினிமா, திரைச் செய்தி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’ஹாரிசன் : அன் அமெரிக்கன் சாகா’ (Horizon: An American Saga) திரைப்படத்தின் பிரீமியர் காட்சி கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய திரையுலகின் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.டாக்டர் எம்.மோகன் பாபு, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியத் திரைப்படமாக உருவாகும் ‘கண்ணப்பா’-வின் நாயகன் விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது மனைவி விரானிகா மற்றும் ‘கண்ணப்பா’ படத்தின் நடன இயக்குநர் பிரபு தேவா ஆகியோரின் வருகை, பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்தது.அட்லியர் விரானிகா வடிவமைத்த தனிச்சிறப்பம்சம் கொண்ட கருப்பு நிற டக்‌ஷிடோ உடையணிந்து கண்கவர் தோற்றத்தில் தோன்றிய நடிகர் விஷ்ணு மஞ்சு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும், அவருக்கான அதிநவீன தோற்றத்தை பாலிவுட் ஒப்பனையாளர் அனிஷா ஜெயின் சிறப்பாக ...
இறுதிகட்ட பணிகளில் யோகி பாபுவின் “வானவன்”

இறுதிகட்ட பணிகளில் யோகி பாபுவின் “வானவன்”

சினிமா, திரைச் செய்தி
‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது.யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன...
மருத்துவர் உருவாக்கிய இசை ஆல்பம்

மருத்துவர் உருவாக்கிய இசை ஆல்பம்

சினிமா, திரைச் செய்தி
மனிதனின் தீரா ஆசைகளை இசை மற்றும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஆல்பம், இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட விழாவில் சரிகம இசை நிறுவனத்தால் வெளியிடப்பட்டதுசென்னையின் பிரபல இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவரும் (சர்ஜிக்கல் கேஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட்) ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் யு.பி. சீனிவாசன் 'ஜண்ட மட்டான்’ எனும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.இந்த ஆல்பத்தை பார்த்து பாராட்டி அதன் உரிமையை முன்னணி இசை நிறுவனமான சரிகம வாங்கி உள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் சிம்புதேவன், பாடகர் மனோ, தயாரிப்பாளர் பி எல் தேனப்பன், இயக்குநர் மந்திரமூர்த்தி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடன இயக்குநர்கள் ஸ்ரீதர் மற்றும் கந்தாஸ், நடிகர் மகேந்திரன் மற்றும் கே பி ஒய் சரத் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொள்ள...
மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் கருணாஸ், அருண்பாண்டியன் நடித்த ஆதார்

மலையாளத்தில் ரீமேக் செய்யப்படும் கருணாஸ், அருண்பாண்டியன் நடித்த ஆதார்

இது புதிது
பல சர்வதேச விருதுகளை வென்று, ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்ற, வெண்ணிலா கிரியேஷன்ஸ் பி. சசிகுமார் தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடிப்பில் வெளியாகி, 2022 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த ஊடகத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய 'ஆதார்' திரைப்படம் மலையாளத்தில் உருவாகிறது. இப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழில் உருவான 'ஆதார்' திரைப்படத்தில் அருண்பாண்டியன் நடித்த அழுத்தமான ரைட்டர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான திலீஷ் போத்தன் நடிக்கவிருக்கிறார்.கருணாஸ் நடிப்பில் வெளியான 'திண்டுக்கல் சாரதி' எனும் வெற்றி பெற்ற படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியவர். ஜீவா- நயன்தாரா நடிப்பில் வெளியான 'திருநாள்', கருணாஸ் நடிப்பில் வெளியான 'அம்பாசமுத்திரம் அம்பானி' மற்றும் '...