Shadow

பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

bigg-boss-3-day-64

‘ஜிகுரு ஜிகரு’ பாடலுடன் தொடங்கியது நாள். லாஸ் முகின் மட்டும் ஆடினார்கள்.

தர்ஷனின் மூட் அவுட்டுக்குக் காரணம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷெரின். வனிதா தன்னைத் தொடர்ச்சியாக டார்கெட் செய்வது தர்ஷனை மிகவும் பாதித்திருக்கிறது. யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டது பிக்பாஸ் தான். அதற்கு பதில் சொன்னவர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லியுள்ளார்கள். எல்லோரும் சொன்ன காரணம் எல்லா டாஸ்க்கையும், எல்லா வேலையையும் ரொம்ப சீரியஸாக எடுத்துப் பண்றது தர்ஷன் தான். கூடவே அவனோட கண்ணீர்ப் பக்கங்களை பற்றியும் சொல்லிருந்தனர். ஆனால் வனிதா முதல் பாயின்ட்டை விட்டுவிட்டு ரெண்டாவது பாயின்ட்டை மட்டும் வைத்து தர்ஷனைத் தொடர்ச்சியாகக் தாக்கிக் கொண்டிருந்தார். ‘தர்சன் ஜெயிக்க ஆசைப்படறோம்’ எனச் சொன்னது தர்ஷனுக்குக்காக விட்டுக் கொடுப்போம் எனத் திரிந்து, இப்போ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் வனிதா. இங்கே யாரும் விட்டுக்கொடுக்கவே இல்லை.

ஒரு விஷயத்தை, பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசினால், எதிராளிக்குக் கூட நாம் இதை தான் பேசினோம் போல எனத் தோன்றிவிடும். அப்படித் தொடர்ச்சியாகத் தர்ஷனை டார்கெட் செய்கிறார். வனிதாவின் ஒரே நோக்கம் தர்ஷனைக் கோபப்படுத்தவேண்டும். அவரைத் தவறாக ரியாக்ட் செய்ய வைக்கவேண்டும். இதை தர்ஷன் புரிந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் தர்ஷனுக்கு இருக்கின்ற வரவேற்பு கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கு.

இதில்லாமல், போன வாரம் தான் வெளியஎ போகப் போவதாக நினைத்து சேரன் ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார். ‘லாஸ் ரொம்ப சின்னபொண்ணு, அதனால கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடுங்க’ என தர்ஷனிடம் தன்னோட மெசெஜாகச் சொல்லிருக்காரு. அதில், ‘விட்டுக் கொடுத்து’ என்கிற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்ட தர்ஷன் அதுக்கும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். ‘ஒரு பிசிக்கல் டாஸ்க் வரும்போது லாஸும் ஆட்டத்துல இருக்கின்ற அளவுக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடுங்க’ என்று தான் சேரன் சொல்லிருக்க வேண்டும். ஆனால் அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, ‘லாஸ்க்கு நீ பிக்பாஸ் டைட்டிலையே விட்டுக் கொடுக்கணும்’ எனச் சொன்னதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். அவர் விட்டுக்கொடுப்பாரா என ஷெரினும் கேட்டார். கமல் பற்ற வைத்த தீ, புகையத் தொடங்குகின்றது.

‘போட்டி ஒரு பக்கம், உறவுகள் இன்னொரு பக்கம், ரெண்டையும் கலக்காத. உன் வேலையை நீ பாரு’ என ஷெரின் சொன்ன அட்வைஸ் சூப்பரு.

தினமும் குளிப்பதன் பயன்களை சாண்டி சொல்லிக் கொடுப்பது தான் இன்றைய டாஸ்க். ‘குளிக்காமல் பளபளன்னு ட்ரெஸ் பண்ணிட்டு, சென்ட் அடிச்சுட்டு, தியானம் பண்றே!’ என மீராவைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார் சாண்டி. மொக்கை போட்டு அந்த டாஸ்க்கை முடித்தார்.

இந்த வாரம் எவிக்சன் இல்லையெனச் சொன்னதால் நாமினேஷனில் ஒரு சுவாரசியமும் இல்லை. எதிர்பார்த்த மாதிரி கவின் தான் முதல் டார்கெட். கவின், முகின், வனிதா கூட ஷெரினும் முதல் தடவையாக நாமினேட் செய்யப்பட்டார். அதுக்கு லாஸ் சொன்னதுதான் காரணம் – தன்னை ஒரு இன்னசன்ட்டாகக் காட்டிக் கொள்கிறாராம்.

‘நீ நாமினேட் ஆக நான் தான் காரணம்’ என கவினிடம் உருகிக் கொண்டிருந்தார். ‘அதெல்லாம் கிடையாது. இப்பருந்து நான் கேம் விளையாடப் போறேன். பாரு கேம் ஆன் வாசகத்தோட டீ ஷர்ட் கூட போட்டாச்சு’ என கவின் சொன்னதைப் பார்த்தால், கமல் தலையில் அடித்து ஒரு கெட்ட வார்த்தை சொல்லிருப்பார்.

அடுத்து வசந்த் & கோ வழங்கிய டாஸ்க். கவின், முகின், சேரன், ஷெரின் அணி வென்றனர். இன்னிக்கும் கேக் தான். 15 பேர் இருந்த போது இத்தூனுண்டு கேக் அனுப்பின பிக்பாஸ், 8 பேர் இருக்கும் போது, பெப்பரப்பே என ஒரு கேக் அனுப்பியிருக்கிறார். வேற எதுனா கொடுங்கய்யா!

‘பிக் பாஸ் டைட்டில் வின் பண்றதுக்கு நான் ஏன் தகுதியானவன்?’ என மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கன்வின்சிங்கா பேசவேண்டும். அதற்கு மற்ற ஹவுஸ்மேட்ஸ் கவுன்ட்டர் கொடுக்கவேண்டும். இது தான் அடுத்த டாஸ்க்.

முதலின் கவின் தான் பேசினார். தான் இத்தனை தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகாமல் இருக்கிறதையே தனக்கு பாசிட்டிவ் காரணமாக முன் வைத்தது ஸ்மார்ட். இதுவரைக்கும் கவின் பெயர் சொல்ற மாதிரி இந்த வீட்டில் சாதித்த விஷயம் என்னவென்று சேரன் கேட்ட கேள்வி மட்டும் தான் சரியா இருந்தது. அதற்குக் கவினிடம் சரியான பதில் இல்லை. அதற்கப்புறம் வனிதா தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பித்தார். கவின்-லாஸ் பற்றியே திரும்பத் திரும்பத் கேட்டுக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் கவின் டைட்டில் வின் பண்றதுக்கும், இப்ப நீங்க எங்களைப் பற்றிப் பேசுவதற்கும் என்ன சம்பந்தம் என லாஸ் கண்டிப்பு காட்டின பிறகு தான் அந்தக் கேள்வியில் இருந்து வெளியே போனார் வனிதா.

‘உங்களை எல்லாம் காலி பண்ணிட்டு ஜெயிக்கப் போறேன்’ என சாண்டியிடம் சொன்னது காமெடியாகத் தான் தெரிந்தது.

அடுத்து சாண்டி, இந்தத் தடவையும் வனிதா தான் வெறுப்பேத்தினார். தர்ஷன் ஜெயிக்க ஆசைப்படறேன் என சாண்டி சொன்னதைப் பற்றி மறுபடியும் கேட்டார். ‘ஹைட்டா இருக்கறவன், பாடியா இருக்கறவன், கலரா இருக்கறவன் தான் வின் பண்ணுவான்னு நீ சொன்னே!’ என தர்ஷனை இன்டைரக்டாகக் குத்தினார். கவினுக்கு லாஸ் மேட்டர் என்றால், சாண்டிக்கு தர்ஷன் மேட்டர். சேரன் கேள்வி தான் இப்பவும் சரி.

அடுத்து தர்ஷன். ‘வேலை, டாஸ்க் எல்லாத்திலேயும் 100% தருவது நான் மட்டும் தான். இது எல்லாருக்கும் தெரியும். அதனால எனக்குத் தகுதி இருக்கு’ என்பது தர்ஷனோட வாதம். இந்தத் தடவையும் வனிதா தான் ஆரம்பித்தார். ‘நான் ஆரம்பத்துல பார்த்த தர்சனுக்கும், இப்ப பார்க்கற தர்ஷனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு’ என வனிதா கேட்ட கேள்வியில் எந்தத் தப்பும் இல்லை. தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அப்படித்தான் நான் அவங்களிடம் நடந்து கொள்கிறேன் நேரடியாக வனிதாவைத் தாக்கியே பதில் கொடுத்தார் தர்ஷன். ஆனால் அதே கேள்வியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தார் வனிதா.

‘ஆரம்பத்துல ஜெயிக்கற எண்ணம் இல்லைனாலும், இப்ப கொஞ்சம் கொஞ்சமா என்னோட போராடுற குணம் வெளிய வந்துட்டு இருக்கு. சோ நானும் போட்டில இருக்கேன்’ என ஷெரினும் விவாதம் செய்தார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் நேற்று பேசியதில் பெஸ்ட் முகின் தான். அவனோட ப்ரசன்டேஷன் சூப்பராக இருந்தது. அதே மாதிரி, ‘நீ யாரையாவது சார்ந்தே இருக்கியே!’ எனக் கேட்டதுக்கும் அட்டகாசமாக, கன்வின்சிங்காகப் பதில் சொல்லி, சேரனையே ஆச்சரியப்பட வைத்தார். ஜெயிக்கிற ஸ்ப்ரிட்டுக்கு சேரனையே உதாரணமாகச் சொன்னதும் அருமை. ‘உன் கோபம் உனக்கு தடையா இருக்கா?’ எனக் கேட்டதுக்கும், அதையும் பாசிட்டிவாகச் சொன்னது க்ளாஸ். கவின் ஒரு தடவை சொன்னா மாதிரி 23 வயதில், இந்த கிளாரிட்டி அபாரம். கமல் பேசினதை சீரியஸாக எடுத்துக் கொண்டு, சில குறைகளைத் தள்ளி வைத்து விட்டால் முகின் முக்கியமான போட்டியாளர் தான்.

ஆக, இந்தத் தடவை வனிதாவின் டார்கெட் சாண்டி, கவின், தர்ஷன். அவர்களைக் கோபப்பட வைக்கவேண்டும். அதன் மூலமாக அவங்க தவறு செய்யவேண்டும். இது தான் வனிதாவின் திட்டம். ஒருத்தர் காயம் பட்டிருக்கும் போது, அந்தக் காயத்து மேலேயே அடிக்கிறது தான் வில்லன் ஸ்டைல். அதை தான் வனிதா பக்காவாகச் செய்கிறார். இதில் யார் முதலில் மாட்டப் போறாங்க என்று தான் தெரியவில்லை. பாய்ஸ் டீம் இதை சரியாக டீல் பண்ணவில்லை என்றால், கண்டிப்பாக யாராவது ஒருவரை வனிதா காவு வாங்குவது உறுதி.

மகாதேவன் CM