Shadow

Tag: Bigg Boss Vanitha

பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்

பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்

பிக் பாஸ்
எந்த இடத்தில் கவின் லாஸ் பக்கம் போனார் என யோசித்தால், கவின் போலீஸாக இருந்த டாஸ்க் தான் ஞாபகம் வருகிறது. அந்த டாஸ்கில் தான் லாஸை விசாரணைக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்த செட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். கூட மீராவும் இருப்பார். அந்த அத்தியாயத்தில் லாஸ் கண்கள் மின்ன வெட்கப் புன்னகையோட கவினிடம் பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப மீரா கூட, "என்னய்யா நடக்குது இங்க” எனச் சொல்லிவிட்டுப் போனார். அந்த மொமன்ட்டில் தான் கவின் விழுந்திருக்க வேண்டும் (அங்கே லான்ல காதலி ஆவியாக இருக்க, இங்க அடுத்த ட்ராக் ஓபன் ஆகிவிட்டது). அப்பவே சாக்‌ஷி - கவின் இடையில் ட்ராக் ஓடிக் கொண்டிருந்தது. சாக்‌ஷியிடம் இல்லாத, லாஸிடம் இருந்த ஒரு விஷயம், மேலே நான் சொன்ன கண்கள் மின்ன வரும் வெட்கப் புன்னகை. கவின் - லாஸ் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது, சாக்‌ஷி இதை ஒரு காரணமாகக் (She is blushing) கூடச் சொன்னார். சாக்‌...
பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன்

பிக் பாஸ்
சேரனின் எவிக்ஷனுக்குப் பிறகு வனிதா இன்னும் குமுறிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளும் மிக மிக நியாயமான கேள்விகள் தான். மிக நன்றாக வேலை செய்பவர், குறை சொல்ல முடியாதபடி டாஸ்க் செய்பவர், அவரால் இந்த வீட்டில் பிரச்சினை என்று சொல்ல எதுவும் இல்லை. வீட்டில் பிரச்சினை வந்த போதும், முடிந்த வரைக்கும் அதைத் தீர்க்கப் பேசியிருக்கார். தனித்தனியாகப் பலருக்கு ஆறுதலாகவும், தேவைப்படும் நேரத்தில் வழிநடத்தவும் செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் மற்ற எல்லோரை விடவும் மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறவர். அப்படி இருக்கும் போது, சேரனின் வெளியேற்றம் நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கு. வனிதாவின் அதிர்ச்சி, கொஞ்சம் மிகையாக இருந்தாலும், அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த வாரம் கவின் தான் போயிருக்க வேண்டுமென ஷெரின் சொன்னதில் விஷயம் இருக்கு. ஒரு பக்கம் சேரனும், இன்னொரு பக்கம் கவினும் இருந்தால் மக்கள் யாருக்கு ஓ...
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ்
வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். "வனிதாக்காடா" என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார். வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்ற...
பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ்
முந்தைய நாள் - ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் சொல்கிறார். ஒரு மெச்சூர்ட் கான்வர்சேஷன், ரொம்பவும் ஆர்டிபிஃஷியலா இல்லாமல் இயல்பாக இருந்தது. பார்க்கவே நன்றாக இருந்தது. தர்ஷனால் தன்னைக் கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேச முடியவில்லை எனத் தெரிந்து கொண்ட ஷெரின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. 'எனக்கும் உனக்கும் நடுவுல ஒன்னும் இல்லை; ஒரு நல்ல ப்ரெண்ட்ஷிப் நமக்கு நடுவ...
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ்
முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 - சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், 'என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க' எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி ஷெரினைச் சமாதானப்படுத்தினார். இன்ஃப்ளூயன்ஸ் செய்வது என்றால் என்ன? அதற்கு மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்கிறதுக்கு இந்த உரையாடல் ஒரு நல்ல உதாரணம். வனிதாவும் ஷெரினும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான். 'நான் உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன்' என வனிதா நிறைய சொல்கிறார். ஆனால் தேவையானதை மட்டும் தான் ஷெரின் எடுத்துக் கொள்கிறார். முந்தின ந...
பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

பிக் பாஸ் 3: நாள் 71 | ‘எனக்கு எண்டே இல்லைடா’ – வனிதா

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ந்தது. ஷெரின் பாத்திரம் தேய்க்க, சாண்டியும் கவினும் லந்து பண்ணிக் கொண்டிருந்தனர். லானில் படுத்துக் கொண்டு, 'வானத்தைப் பார்த்தேன் பூமியைப் பார்த்தேன்' எனப் பாடிக் கொண்டிருந்த லாஸிடம், "சாப்பிடலியா?" எனக் கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தார் சேரன். 'பசியில்லை' எனச் சொன்ன லாஸ், 'இங்க வாங்க உங்க கூட கதைக்கணும்' எனச் சொல்ல சேரனும் வருகிறார். ஒரே வீட்டுல இருந்து கொண்டு வாரம் ஒரு தடவை தான் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு முன்னாடி கவினுக்கும் லாஸ்க்கும் அட்வைஸ் கொடுக்கும் போது பேசினார். அதற்கு முன்னாடி கமல் எபிசோட் முடிந்து இரண்டு பேரும் அழுதனர். 'ஒரு அரை மணி நேரம் எங்கூட பேச உனக்குத் தோனலியா? நான் பேசறது, பழகறது பொய்ன்னு உனக்குத் தோனிச்சுன்னா, எங்கிட்ட வந்து கேட்ருக்கலாமே? நீ பேச வேண்டாம்ன்னோ, பழக வேண்டாம்ன்னோ நான் சொல்லவே இல்லையே! உனக்கான சுதந்திரம் உங்கிட்ட தான் இருக்கு. ...
பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நாள். நான் ஏன் இந்த வெற்றிக்குத் தகுதியானவன்? டாஸ்கில் லாஸ் தன் வாதத்தை எடுத்து வைத்தார். லாஸ்லியாவுக்கு ஆர்மி இருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதுவே அவருக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கவின் சொன்ன மாதிரி, தான் இரண்டு தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகவில்லை. 'சோ அப்ப நான் சரியாத்தான் இருக்கேன்' என விவாதம் செய்தார். சாக்‌ஷி எலிமினேட் ஆன நேரத்தில், லாஸ் - கவின் இரண்டு பேரும் நாமினேஷனில் இருந்தார்கள். மூன்று பேரில் சாக்‌ஷியை மக்கள் வெளியே அனுப்பினதால், அவங்க பக்கம் தப்பில்லை என முடிவுக்கு வந்து விட்டார். இதை லாஸ் யோசிக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக கவினோட பேசித்தான் இது லாஸுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் கமல் சொல்லியும், ஹவுஸ்மேட்ஸ் சொல்லியும் எதையும் கேட்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு பேரும் அவர்கள் விருப்பத்திற்கு நடந்த...
பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

பிக் பாஸ் 3: நாள் 64 | கமல் பற்ற வைத்த நெருப்பு ஒன்று

பிக் பாஸ்
'ஜிகுரு ஜிகரு' பாடலுடன் தொடங்கியது நாள். லாஸ் முகின் மட்டும் ஆடினார்கள். தர்ஷனின் மூட் அவுட்டுக்குக் காரணம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷெரின். வனிதா தன்னைத் தொடர்ச்சியாக டார்கெட் செய்வது தர்ஷனை மிகவும் பாதித்திருக்கிறது. யார் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டது பிக்பாஸ் தான். அதற்கு பதில் சொன்னவர்கள் ஒவ்வொரு காரணம் சொல்லியுள்ளார்கள். எல்லோரும் சொன்ன காரணம் எல்லா டாஸ்க்கையும், எல்லா வேலையையும் ரொம்ப சீரியஸாக எடுத்துப் பண்றது தர்ஷன் தான். கூடவே அவனோட கண்ணீர்ப் பக்கங்களை பற்றியும் சொல்லிருந்தனர். ஆனால் வனிதா முதல் பாயின்ட்டை விட்டுவிட்டு ரெண்டாவது பாயின்ட்டை மட்டும் வைத்து தர்ஷனைத் தொடர்ச்சியாகக் தாக்கிக் கொண்டிருந்தார். 'தர்சன் ஜெயிக்க ஆசைப்படறோம்' எனச் சொன்னது தர்ஷனுக்குக்காக விட்டுக் கொடுப்போம் எனத் திரிந்து, இப்போ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் வனிதா. இங்கே யாரும் விட்...
பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்

பிக் பாஸ்: 3 நாள் 62 – ‘ஒரே அசிங்கமா போச்சு குமாரு!’ – கவின் & லாஸ் மைண்ட்-வாய்ஸ்

பிக் பாஸ்
60 கேமராக்கள் என்று சொல்வதை நிரூபிக்கும் வகையில், 60 ஸ்கிரீனுடன் தோன்றினார் கமல். பார்க்கவே பிரம்மாண்டமாக இருந்தது. கமலே சொன்னது போல் இத்தனை கேமராவில் இருந்தும் ஒரு மணி நேரத்துக்கான ஃபூட்டேஜ் எடுத்து, தேவையானது, தேவையில்லாதது எனப் பிரித்து, எடிட் பண்றதெல்லாம் சரியான வேலையாக இருக்கும். அதற்கே ஒரு பெரிய டீம் தேவை. ஆனால் அதில்லாமல் சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்கள், சமூக அக்கறையாளர்கள் என இன்னொரு டீம் இருக்காம். எதை காண்பிக்க வேண்டும், எது வேண்டாம் என இவங்க எல்லோரும் சேர்ந்து தான் முடிவு செய்வதாகச் சொன்னார். வெள்ளிக்கிழமை பாட்டு போட்டும் யாரும் பெரிதாக எழுந்திரிக்கவில்லை. காபி சாப்பிட்டு பார்த்தால், மீரா மாதிரி யோகா பண்ணிக் கொண்டிருந்தார் கஸ். சோபாவில் உட்கார்ந்து தான் யோகா செய்வார்களா? சீன் போட்டாலும் அதில் கொஞ்சமாச்சும் மூளையை உபயோகிக்க வேண்டாமா? பாய்ஸ் டீம் அதைக் கலாய்த்துக் கொண்டிர...
பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ்
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார். “சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார். லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர...
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டற...
பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ்
'யாரடி நீ மோகினி' பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே! மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட ஸ்கோர் செய்வதால் தான் சாண்டியை எல்லோருக்கும் பிடிக்குது. இன்னிக்கும் மன்னர் வேஷத்துக்கு இருக்கின்ற ப்ராபர்ட்டீஸை வைத்து, ஒரு அட்டகாசமான அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிருந்தார். ஹாட்ஸ் ஆப் சாண்டி & டீம். காலையிலேயே முகின் மூட் அவுட்டாக இருந்தார். அபியிடம் பேசவில்லை போல. சாப்பிட வந்த போதும் ஒரு வார்த்தையில் பத...