பிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்
நாம் வேலை பார்க்கிற ஆஃபிசுக்கு இரண்டு பேர் வேலைக்கு வருகிறார்கள். அதில் ஒருத்தரைப் பார்த்த உடனே நமக்குப் பிடித்துப் போய்விடும். இன்னொருத்தரைப் பிடிக்கவே பிடிக்காது. இரண்டுக்குமே எந்த காரணமும் இருக்காது. ஏதோ ஒரு சினிமாவில் சொல்ற மாதிரி, ‘பிடிக்கறதுக்கும் பிடிக்காம போறதுக்கும் காரணமே தேவையில்லை’. ஆனால் கொஞ்ச நாள் கடந்ததும், பார்த்த உடனே பிடித்துப் போன நபரின் உண்மை முகம் தெரிய வரும். அதே மாதிரி நமக்குப் பிடிக்காமப் போனவரோட நல்ல குணங்கள் தெரியவரும். கொஞ்ச கால இடைவெளியில் இரண்டு மனிதர்கள் மீது நமக்கு இருந்த மதிப்பீடுகள் முழுதாக மாறியிருக்கும். நிஜ வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எந்த கேமெராவும் இல்லை. அதனால் நம்ம முடிவுகள், மாற்றங்கள் பெரிதாக யாருக்கும் தெரியாது.
ஒரு வீடு, வீட்டைச் சுற்றி கேமெரா, நமக்கு அறிமுகமில்லாத 16 பேர். அவர்களுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழவேண்டும். இப்பொழுது மேலே சொன்ன விஷய...