பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்
எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் - லாஸ் அத்தியாயம் தான்.
தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், 'லாஸ் என்ன நினைக்கறாங்க?' என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் பண்ணி ஏதாவது சொல்லுவாங்க என நினைக்கின்றேன். லாஸ் கொஞ்சம் டேஞ்சரான பெண் தான். நார்மலாகவே பெண்கள் உடனக்குடனே ரியாக்ஷன் காட்டிவிடுவார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி நடந்துக் கொள்கிற லாஸ் உண்மையிலேயே கல்லுளிமங்கி தான்.
கவின் - லாஸ் பேசிக் கொண்டிருக்கிறதை சாண்டி, சேரன், தர்ஷன் கிண்டல் பண்ணிக் க...