Search

பிக் பாஸ் 3: நாள் 69 | ‘கலையும் சார்ந்தது தான் கலாச்சாரம்’ – கமல்

bigg-boss-3-day-70

நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி வரவேற்க மேடைக்கு வந்தார் கமல். கலைகளைப் பற்யும், கலாச்சாரத்தை பற்றியும் ஒரு பிரசங்கம் நடந்தது. தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பழகவேண்டும். அதில் கமலை அடித்துக் கொள்ளவே முடியாது. இந்தக் கலைஞர்கள் வந்ததையும் தன் அரசியல் மைலேஜ்க்கு உபயோகப்படுத்திக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். யுவன் பிறந்த நாளுக்கு, ‘மேல ஏறி வாரோம்’ பாட்டைப் போட, சேரன் வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள்.

நேற்று ஷெரின் கூடுதல் உற்சாகத்தோடு இருந்தார். பாத்ரூம் ஏரியாவில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தவர், கவினோடு சேர்ந்து, ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தார். ‘சாக்‌ஷி வந்து என்னைக் கூட்டிட்டுப் போவாளா?’ எனக்னு கேட்டுக் கொண்டிருந்தார்.

தனக்குக் கொடுக்கப்பட்ட பஜ்ஜியைக் கவினுக்குக் கொடுத்து பாதியை வாங்கிச் சாப்பிட, அங்கே அமர்ந்திருந்த லாஸ்க்கு டன் கணக்கில் அதிர்ச்சி. ‘என்னய்யா நடக்குது இங்க?’ என லாஸ் கேட்க, இன்னும் கொஞ்சம் இரிடேட் பண்ணினார் ஷெரின். அதுவரைக்கும் சாப்பிட்டுக் கொண்டிருந்த லாஸ், தன்னிடம் இருந்த எல்லா பஜ்ஜியையும் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு, ‘பஜ்ஜி எனக்குப் பிடிக்காது’ எனச் சொன்னார். லாஸ் உள்ள போனதுக்கு அப்புறம், ‘சாரிடா மச்சான்’ என கவினிடம் சொல்லிச் சிரித்தார் ஷெரின்.

“ம்” எனச் சொன்னாலே எட்டு முழத்துக்குப் பேசுகின்ற கவினுக்கு, லாஸ் பொசசிவ் ஆனது தெரிந்து சும்மா இருப்பாரா? ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணினார்.

எவிக்‌ஷனில் இருந்ததால் பேக்கிங் பண்ணிக் கொண்டிருந்தார் ஷெரின். கூடவே தர்ஷன், முகின், சேரன் எல்லோரும். செம்ம அலப்பறை. பயங்கர ஜாலியாக இருந்தார் ஷெரின்.

வெளியே உட்கார்ந்து சாண்டியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க, அவரும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நல்ல ஜாலியான பார்ட் அது.

கிராமியக் கலை சொல்லிக் கொடுத்ததில், ‘யார் நல்லா செஞ்சாங்க?’ எனக் கேட்க, சாண்டி செலக்ட் ஆனார். சாண்டி மீசை எடுத்ததைச் சுட்டிக் காட்டின போது, தானும் மீசை எடுத்ததைத் தடவிக் காட்டி குறும்பு செய்தார் கமல்.

திங்கறவன் தின்னுட்டுப் போக திருப்பத்தூரான் தண்டம் கட்டினான் – கவின்

ஒரு கரண்டி மாவுல ஊருக்கெல்லாம் தோசை – முகின்

ஊராளும் மகராசாக்கு வாராரு செம்பு தூக்கி – தர்சன்

அறிவுக்கு பாத்திரம் – சேரன்

கூத்து நடக்கப்போகுது, உங்க குடும்பக் கதையை பத்தி பேசாதீங்க – லாஸ்.

இப்படி சில ஒன்லைனில் ஹவுஸ்மேட்ஸ் பற்றிச் சொன்னார்.

கிராமியக் கலைஞர்கள் விடைபெற்று போனதுக்குப் பின், ‘நான் ஏன் ஜெயிக்கணும்?’ என காரணங்களைச் சொல்வதற்கு ஹவுஸ்மேட்ஸ்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.

முதல் ஆளாக தானே முன்வந்து பேசினது முகின் தான். கமல் பேசினதுக்கு அப்புறம் செம தெளிவாக இருக்கார். நல்ல மெச்சூரிட்டி, திறமைசாலி, பன்முகத்தன்மையோட இருக்கின்ற முகின் ஃபைனலுக்கு வரவேண்டும். தன் தந்தைக்கு அறிவுரையும் வாழ்த்தும் சொல்லி, க்ளாப்ஸ் வாங்கினார். மற்ற ஹவுஸ்மேட்ஸும் பேசினார்கள். தர்ஷன், ஷெரின் நன்றாகப் பேசினார்கள்.

தலைவர் பதவி போட்டிக்கு ரேட்டிங் கொடுத்ததைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘கடைசி இடங்கள் கொடுத்தது ஏன்?’ என சேரன், வனிதா, முகின் ஆகியோரிடம் கேட்டார். சேரன் மிகவும் நேர்மையாகப் பதில் சொன்னார். ‘ஒன்னு பெருசா? எட்டு பெருசா?’ எனக் கேட்டு, வனிதாவுக்கு எட்டு கொடுத்ததை பாசிட்டிவாக மாற்றி கைதட்டு வாங்கினார் முகின்.

‘எட்டு தான் பெருசு இல்லையா? அதைப் பத்தி ஒரு எட்டு பேசுங்க’ என வனிதா முகினுக்கு எட்டுக் கொடுத்ததையும் சொல்லிக் காட்டினார். வனிதா பேச ஆரம்பிக்க வழக்கம் போல கைதட்டி பேசவிடாமல் செய்தனர் பார்வையாளர்கள். ‘உங்களையும் என்னையும் பேசவே விட மாட்டேங்கிறாங்க சார்’ என கம்ப்ளெயின்ட் பண்ணினார் வனிதா. ‘ஏங்க பேசவே விட மாட்டேங்கறிங்க? அவங்களே எப்பவாது தான் பேசறாங்க’ என கிண்டல் செய்தவர், ‘அவங்க கிடக்கறாங்க நீங்க பேசுங்க’ என வனிதாவிடம் சொன்னது க்யூட்.

அதற்கப்புறம் வழவழா கொழகொழா தான். எல்லோரும் பேசிகொண்டே இருந்தார்கள்.

‘யாரை உடனே வெளியேத்தணும்?’ என கமல் கேட்க, வனிதா பெயர் மெஜாரிட்டியில் வந்தது. ‘வனிதாவை வெளியே அனுப்பிவிட்டு சோத்துக்கு என்னடா செய்வீங்?’ என ஷெரின் கேட்டது நெத்தியடி கேள்வி. முந்தின நாளில் மழை பெய்யும் போது, பஜ்ஜி போட்டு கொடுத்ததை மறந்துவிட்டு இப்படிச் செய்றீங்களேடா? அடுத்த இடத்தைக் கவின் பிடித்தார்.

எவிக்‌ஷனில் வெளியே போறவங்க பாவைப் பொம்மையை வைத்து செய்தி சொன்னார்கள். முகின், கவின், ஷெரின் என மூன்று பேரும் ஜாலியாக மெசெஜ் சொன்னார்கள்.

நேற்று கமல் மிகவு சோர்வாக இருந்தார். இன்றாவது ஏதாவது சுவாரஸ்யஸ்மாக இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

– மகாதேவன் CM