Shadow

“க்ளைமேக்ஸ் நடனத்தில் எமோஷன்ஸ்ங்கிறது ரொம்பவே சவால்” – பிரபுதேவா | கண்ணப்பா

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், பிநடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

பிரபு தேவா, “இந்தப் படத்திற்காக மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். மோகன் பாபு சார் எனக்கு போன் பண்ணி என்னை வர வேண்டும் என்று சொன்னார். ‘நான் வரணுமா சார்?’ என்றேன். ”நீ வரலன்னா நான் உன் வீட்டுக்கு வந்துடுவேன்” என்றார். நானே வந்துடுறேன் சார் என்றேன். மூன்று பாடல்களிலும் நடனம் பெரிதாக இருக்காது. ஆனால் எமோஷனல் இருக்கும். அதே போல் கிளைமேக்ஸ் பாடல் மிகவும் முக்கியமானது. அதில் நீ முக்கியமாக இருக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கும், கிளைமாக்ஸில் பாடல் என்பது இது தான் முதல் முறை. அதே போல் அதில் நடனத்தை விட எமோஷனலை கொண்டு வர வேண்டும் என்பது சவலாக இருந்தது. அதனால் பணியாற்றவும் ஆர்வமாகவும் இருந்தது. இயக்குநர் முகேஷ் குமார் சிங் என்றதும், ‘அவர் இந்தி அவருக்கு எப்படி நமது கலாச்சாரம் தெரியும்?’ என்று நான் யோசித்தேன். ஆனால், அவருக்கு சிவனைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. எங்க அனைவரையும் விட அவருக்கு தான் அதிகம் தெரிந்திருக்கிறது. இந்தப் படத்தை இயக்குவதற்கு அவர் தான் சரியான நபர், சிறந்த இயக்குநர். அமெரிக்கன் ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள். விஷ்ணு எனக்கு தம்பி போல, மோகன் பாபு சார் எனக்குப் பெரிய அண்ணன். அவருக்கு என் வாழ்த்துகள். படப்பிடிப்பு தளத்தில் விஷ்ணு ஒரு தயாரிப்பாளர் போல் இருக்க மாட்டார். ஒரு உதவி இயக்குநர் போல், புரொடக்‌ஷன் உதவியாளர் போல தான் இருப்பார். தயாரிப்பாளர் பக்கம் நிற்காமல், தொழில்நுட்பக் கலைஞர்கள் பக்கம் இருப்பார்” என்றார்.