Shadow

சினிமா

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

காட்சிப்பிழையும், குருட்டுத் தீர்மானங்களும்

கட்டுரை, சினிமா
தொடர்ந்து ஃபோன் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிக்னலைத் தாண்டியதும் இடதுபுறம் வண்டியை ஓரங்கட்டிப் பேசினேன். என்னெதிரே ஹெல்மெட் போடாதவர்களை மறித்துக் கொண்டிருந்தார் ட்ராஃபிக் கான்ஸ்டபிள். நான் வண்டியைச் சீராக நகர்த்தியதுமே என்னையும் மறித்தார். ஆவணங்களைச் சரி பார்த்து விட்டு, “உங்களை ஏன் தெரியுமா நிறுத்தினேன்? சிக்னல் விழும் முன்பே, ஃப்ரீ லெஃப்ட் போல் திரும்பிட்டீங்க!” என்றார். நான் கொஞ்சம் திகைத்து, “சார் நான் லெஃப்ட்ல இருந்து வரலை. நேரா வந்தேன். ஃபோன் பேச ஓரமா நிறுத்திட்டு வர்றேன்” என்றேன். லைசென்ஸை என்னிடம் கொடுத்தவாறு, “அவரைப் பாருங்க” என்றார். அவரருகில் போய் நின்றேன். “என்ன கேஸ்?” என்றார். “சார், நான் நேரா வந்தேன். லெஃப்ட்ல இருந்து வந்தேன் எனச் சொல்லி உங்களைப் பார்க்கச் சொன்னார்” என்றேன். “அவரிடம் போய் பேசுங்க” என்றார். மீண்டும் என்னை மடக்கிய கான்ஸ்டபிளிடம் வந்தேன். “என்ன சொன்னார்?” எனக...
ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் பேபி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நம்மால் கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவே முடியாத ஒரு கதையை, மிக நேர்த்தியான நகைச்சுவைப் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் ஷரோன் மக்வயர் (Sharon Maguire). ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் சீரிஸில் இது மூன்றாவது படம். முந்தைய பாகங்களைப் பார்க்கவிடினும் கூடப் பாதகமில்லை. இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கலகலப்பாக்கிவிடும். படத்தின் கதை அப்படி. 43 வயதாகும் ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் கர்ப்பமாகிறார். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை முன்னாள் காதலன் மார்க் டார்சியா அல்லது இசை விழாவில் சந்தித்த அந்நியனான ஜாக் க்வான்ட்டா என்பதில் நிச்சயமற்று இருக்கிறார் ப்ரிட்ஜெட்.  மூன்று படங்களுமே ப்ரிட்ஜெட்க்கு ஏற்படும் உறவுச் சிக்கல்கள் பற்றியதே! 1995இல் எழுத்தாளர் ஹெலன் ஃபீல்டிங் எழுதிய நாவலான “ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்’ஸ் டைரி”யை அடிப்படையாகக் கொண்டு, 2001 இல் முதல் பாகம் வந்தது. 1999இல் எழுதப்பட்ட 'ப்ரிட்ஜெட் ஜோன்ஸ்: எட்ஜ் ஆஃப் ரீசன...
காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காஷ்மோரா என்றால் எல்லாப் பூதங்களையும் அடக்க வல்ல பூதவித்தையின் பெயர் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அந்த வித்தை பிறவிலேயே கை கூடுவதால் நாயகனுக்கு அந்தப் பெயர் அவரது தந்தையால் சூட்டப்படுகிறது (காஷ்மோரா என்பது எவராலும் வெல்ல முடியாத ஒரு துர்தேவதை; அதை எழுப்பி ஏவி விட்டால் எதிரியை 21 நாளில் கொன்று விடும்; பில்லி, சூனியத்தை விட ஆபத்தான ஏவல் வித்தை காஷ்மோரா என்கிறார் 'துளசி தளம்' எனும் நாவலில் தெலுங்கு எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்). சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸ்த்ரீலோலன் ராஜ்நாயக் சாபத்தினால் பைசாசமாய் ஒரு மாளிகையில் அடைப்பட்டுள்ளான். அந்த மாளிகைக்கு வரவழைக்கப்படுகிறான் பிறவிப் பேயோட்டியான காஷ்மோரா. யார் யாரை ஓட்டுகின்றனர் என்பதே படத்தின் கதை. படத்தின் ஓப்பனிங் காட்சி படு பிரமாதமாய் உள்ளது. ஒரு சீரியஸான படத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே ஒரு பாடல் வருகிறது. அங்குத் தொடங்...
கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் - த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை. தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவில...
திரைக்கு வராத கதை விமர்சனம்

திரைக்கு வராத கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் இல்லாப் படங்கள் கூட அரிதினும் அரிதாய் வரும். முழுக்க முழுக்க பெண் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள படமிது. திரையில் எந்தவொரு ஆணின் நிழலும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இருந்துள்ளார் மலையாள இயக்குநரான துளசிதாஸ். இதுவரை திரையில் வந்தேயிராத கதையினுடைய குறும்படம் ஒன்றினை எடுக்க நினைக்கும் திரைப்படக் கல்லூரி மாணவியான இனியாவிற்குள் ஓர் ஆவி புகுந்து கொள்கிறது. யாரந்த ஆவி என்பதும், அதன் மரணப்பசிக்குக் காரணம் ஏன் என்பதும், அதன் பசி அடங்கியதா என்பதும் தான் படத்தின் கதை. நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளால் படத்தின் முதல் பாதி ரொம்பவே கடுப்பேற்றுகிறது. பாய் ஃப்ரெண்டுடன் உரையாடுவது போல் நாயுடன் பேசுகிறார் கோவை சரளா; 'என் பட்டக்சில் உதைச்சது யார்?' எனக் கேட்கிறார் ஆர்த்தி; 'எனக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ்' என காதுக்கு ஒரு ஃபோனெனச் சல்லாபிக்கிறார் கோவை சரளா; பீர் கு...
என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

சினிமா, திரைத் துளி
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, 'ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்' என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்துப் படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். பட அனுபவம் பற்றி ஷாம் பேசத் தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது, "நான் '6' படம் வெளியான ...
சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமா, திரைத் துளி
சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார். ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். 'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற கருத்தை முன் வைக்கிறது படம். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்...
கொடி இசை – ஒரு பார்வை

கொடி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர். 1. பாடல் - ஏய் சுழலி பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன் விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. 2. பாடல் - சிறுக்கி வாசம் பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன் சந்தோஷ் நாராயணன் இசையில் இன்ன...
தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

தி அக்கெளன்டன்ட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மிக நிறைவானதொரு ஆக்‌ஷன் த்ரில்லர். க்றிஸ்டியன் வொல்ஃப் ஓர் ஆட்டிச சிறுவன். படம் முக்கியத்துவம் பெறுவது இந்தப் புள்ளியில்தான். அது மேலும் விசேஷமாவது, அதில் வரும் வித விதமான மனிதர்களால். "க்றிஸ்டியனை எங்களிடம் விட்டுப் போங்க. இந்தக் கோடையில் மட்டுமாவது.. பணம் எதுவும் வேண்டாம். இலவசமாக.. நாங்க அவனைப் பொறுப்பா கவனிச்சிக்கிறோம்" என்கிறார் ஹார்பர் நியூரோசயின்ஸ் நிறுவனத்தின் தலைவர். "இவர்கள் போன்றவர்களுக்கு, திடீர் சத்தமும் வெளிச்சமும் பாதுகாப்பற்ற உணர்வைத் தருவதால் கத்துறாங்க. ஸ்பெஷல் கிட்ஸைப் பார்த்துக் கொள்வது ஒரு சவால்" என்பார் அந்நிறுவனத்தின் தலைவர். அதற்கு க்றிஸ்டியனின் அம்மா, "மற்ற குழந்தைகளுக்கு அப்படி நேரும்போது, அது சவால். உங்க குழந்தைகளுக்கு அப்படியாகும் போது அது பிரச்சனை" என்பார் மன அழுத்தத்தில். அவருக்கு க்றிஸ்டியனை அங்கேயே விட்டுவிட வேண்டுமென எண்ணம். இராணுவ அதிகாரியான க்றிஸ்டியனின்...