32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 46)
“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன் இது புதிது

“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ‘வா’ என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், ‘நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் […]

05/08/2024 Dinesh R
ஸ்வீட் ஹார்ட் | ரியோ ராஜ் டப்பிங் சினிமா

ஸ்வீட் ஹார்ட் | ரியோ ராஜ் டப்பிங்

ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளார்.‌ அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி, சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை […]

05/08/2024 Dinesh R
G2 | பான்-இந்திய ஸ்பை த்ரில்லர் திரைப்படம் அயல் சினிமா

G2 | பான்-இந்திய ஸ்பை த்ரில்லர் திரைப்படம்

“கூடாச்சாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில், G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் தரத்திற்குச் சான்றாய் அமைந்துள்ளது. G2 படம் மிகச் சிறந்த ஸ்பை த்ரில்லராக உருவாகி வருகிறது […]

05/08/2024 Dinesh R
VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் அயல் சினிமா

VD12 – விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம்

விஜய் தேவரகொண்டா,  கௌதம் தின்னனுரி, சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா  இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ‘ஜெர்ஸ்ஸி’ & ‘மல்லி ராவா’ ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘VD 12 ‘எனும் […]

04/08/2024 Dinesh R
நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம் இது புதிது

நண்பன் ஒருவன் வந்தபிறகு விமர்சனம்

விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர விரும்பும் இளையராஜா ரசிகரான வெங்கட் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகரான ஆனந்தினை சந்திக்கிறார். ஆனந்த் தன் வாழ்க்கையைக் குறித்தும், நண்பர்களைக் குறித்தும் வெங்கட் பிரபுவிடம் பகிர்வதுதான் படத்தின் கதை. சின்னச் சின்ன ஆசை, குட்டிச்சுவர் ஏறி, கல்லூரிச் சாலை, தனிமை தனிமையோ, Take it ஊர்வசி, வான் இங்கே நீலம் அங்கே, எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த பாடலின் வரிகளை அத்தியாயங்களுக்கான உப தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். IV Trip […]

03/08/2024 Dinesh R
பேச்சி விமர்சனம் இது புதிது

பேச்சி விமர்சனம்

ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் […]

02/08/2024 Dinesh R
வாஸ்கோடகாமா விமர்சனம் சினிமா

வாஸ்கோடகாமா விமர்சனம்

  வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள். அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு […]

02/08/2024 Dinesh R
BOAT விமர்சனம் சினிமா

BOAT விமர்சனம்

சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா […]

02/08/2024 Dinesh R
தி ராஜா சாப் – பிரபாஸின் ரொமான்டிக் ஹாரர் காமெடி அயல் சினிமா

தி ராஜா சாப் – பிரபாஸின் ரொமான்டிக் ஹாரர் காமெடி

ரிபெல் ஸ்டார் பிரபாஸின் பான்-இந்தியப் படமான ‘தி ராஜா சாப்’ படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகத் தயாரிப்பாளர்கள் ஓர் அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அசத்தலான வின்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ். ‘தி ராஜா சாப்’ திரைப்படம், ஏப்ரல் 10, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ளனர். வின்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமான்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்கத் தயாராக இருக்கிறார். மாருதி, பிரபாஸை […]

31/07/2024 Dinesh R
Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை அயல் சினிமா

Deadpool & Wolverine | ரூ. 3650 கோடி வசூல் சாதனை

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் டெட்பூல் & வுல்வெரின் படத்தைத் திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்தப் படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. இந்தியாவில் ‘டெட்பூல் 1’ (40.79 கோடி GBOC) மற்றும் ‘டெட்பூல் 2’ (69.94 கோடி GBOC) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, […]

30/07/2024 Dinesh R
ஜமா விமர்சனம் இது புதிது

ஜமா விமர்சனம்

கூத்துக்கலை என்பது மனிதர்கள் சில பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது. ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் […]

30/07/2024 Dinesh R
மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன் இது புதிது

மழை பிடிக்காத மனிதன் – விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது பார்வையைக் காட்சிகளாக மாற்றும் போது அந்தப் படைப்பின் காட்சிகள் புதுமையான காண் அனுபவத்தை அளிக்கும். படத்தை இயக்கும் இயக்குநரே அதற்கு ஒளிப்பதிவு செய்யும்போது அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தினை விஜய் மில்டன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. விஜய் மில்டன், “தலைப்பு கதைக்கு […]

29/07/2024 Dinesh R
ஸ்வீட் ஹார்ட் | கலகலப்பான அறிமுக அசைவொளி இது புதிது

ஸ்வீட் ஹார்ட் | கலகலப்பான அறிமுக அசைவொளி

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ எனப் பெயரிடப்பட்டு, அத்தலைப்பிற்கான பிரத்தியேக அசைவொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தைக் கவனிக்க, […]

29/07/2024 Dinesh R
“சென்னை கானாவும், கருநாடக சங்கீதமும்” – ஜிப்ரான் வைபோதா | BOAT இது புதிது

“சென்னை கானாவும், கருநாடக சங்கீதமும்” – ஜிப்ரான் வைபோதா | BOAT

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் […]

29/07/2024 Dinesh R
“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT இது புதிது

“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் […]

29/07/2024 Dinesh R