32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 47 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 47)
“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT இது புதிது

“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா […]

29/07/2024 Dinesh R
BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன் சினிமா

BOAT படம் எப்படி உருவானது? – இயக்குநர் சிம்புதேவன்

நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான ‘போட்’ படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி உருவானது என்பது பற்றி இயக்குநர் சிம்புதேவன், ”நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேன்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்தப் படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் […]

29/07/2024 Dinesh R
மழை பிடிக்காத மனிதன் – மேகா ஆகாஷ் இது புதிது

மழை பிடிக்காத மனிதன் – மேகா ஆகாஷ்

ஆகஸ்ட் 2, 2024 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். “விஜய் மில்டன் சார் எப்போதும் தனது படங்களில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரங்களைத் தருவார். ’மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்காக என்னை அணுகியபோது, கதையைக் கேட்கும் முன்பே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், எனக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் கிடைக்கிறது என்பதுதான். நான் நினைத்தது போலவே, படத்தில் நல்ல கதாபாத்திரம் […]

27/07/2024 Dinesh R
மழை பிடிக்காத மனிதன் – சரத்குமார் சினிமா

மழை பிடிக்காத மனிதன் – சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமார் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் கமல் போஹ்ரா, டி. லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி நடிகர் சரத்குமார், “விஜய் […]

27/07/2024 Dinesh R
திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம் சினிமா

திருமணமான ஆண்களின் பிரச்சனைகளைப் பேசும் படம்

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ – மாளவிகா மனோஜ்  ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குநர் ‘பிளாக்‌ஷீப்’ கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளைப் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாகச் சொல்லும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகிறது. பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய […]

26/07/2024 Dinesh R
ராயன் விமர்சனம் இது புதிது

ராயன் விமர்சனம்

D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், […]

26/07/2024 Dinesh R
Deadpool & Wolverine விமர்சனம் அயல் சினிமா

Deadpool & Wolverine விமர்சனம்

வானத்தின் கீழ் இருக்கும் எதுவுமே புனிதமில்லை என சகலத்தையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கும் டெட் பூல், இம்முறை பன்னண்டத்தில் (Multi-verse) இருக்கும் அத்தனையையுமே கேலிக்கும் கேள்விக்கும் கிண்டலுக்கும் உரியவை தான் என டாப் கியரில் கலாய்த்துள்ளார். முத்தாய்ப்பாக டெட்பூல் படத்தின் முன்னாள் உரிமையாளரான ’21st Century Fox’-ஐ சகட்டுமேனிக்குக் கலாய்த்துத் தள்ளுகிறார் டெட்பூல். ஆங்கில வசனங்களின் சாறு குறையாதவண்ணம் தமிழ் டப்பிங்கையும் மிகக் கலகலப்பாக எழுதியுள்ளனர். சூப்பர் ஹீரோ நகைச்சுவைப் படம் என்றாலும் A சான்றிதழ் பெற்ற […]

26/07/2024 Dinesh R
சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’ சினிமா

சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’

ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் இசையில், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன், “‘மின்மினி’ படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்குத் தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய […]

25/07/2024 Dinesh R
LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு Movie Posters

LIK | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி […]

25/07/2024 Dinesh R
“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா சமூகம்

“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா

இரண்டு தலைமுறைகளாக தமிழ்த்திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசைத்துறையில் […]

25/07/2024 Dinesh R
யுவன் இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதல்முறையாக 360° மேடையில் சமூகம்

யுவன் இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதல்முறையாக 360° மேடையில்

இரண்டு தலைமுறைகளாக தமிழ்த்திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசைத்துறையில் […]

25/07/2024 Dinesh R
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது சினிமா

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் […]

24/07/2024 Inbaaraja
‘ரகு தாத்தா நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படம்” – நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா

‘ரகு தாத்தா நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குத் திரைப்படம்” – நடிகை கீர்த்தி சுரேஷ்

இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது.‌ :தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், […]

24/07/2024 Inbaaraja
எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா சாட்டர்டே படத்திலிருந்து வெளியான க்ளிம்பஸ் சினிமா

எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா சாட்டர்டே படத்திலிருந்து வெளியான க்ளிம்பஸ்

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே […]

24/07/2024 Inbaaraja
RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் இது புதிது

RED FLOWER – காதல் விருந்தளிக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர்

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் RED FLOWER, ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன். ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி RED FLOWER படத்தின் புதிய பரபரப்பான லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் விக்னேஷது கதாபாத்திர வடிவமைப்பும், அவரது தோற்றமும் நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும். அவரது மறுபிரவேசதிற்கு கட்டியம் கூறும்விதமாக […]

21/07/2024 Dinesh R