32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 64 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 64)
ரசவாதி – சித்த வைத்தியரும், ஐ.டி. பெண்ணும் சினிமா

ரசவாதி – சித்த வைத்தியரும், ஐ.டி. பெண்ணும்

இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படமான மௌன குரு, தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதோடு கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான மகாமுனி 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் […]

29/04/2024 Dinesh R
”தூய்மை பணியாளர்களின் வலி எவ்வளவு கொடியது” – இயக்குநர் ஸ்ரீவெற்றி ஆதங்கம் சினிமா

”தூய்மை பணியாளர்களின் வலி எவ்வளவு கொடியது” – இயக்குநர் ஸ்ரீவெற்றி ஆதங்கம்

ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது. இந்தநிலையில் தூய்மை பணியாளர்களின் அவல நிலையையும், அவர்களது நலன் குறித்த அரசின் […]

29/04/2024 Inbaaraja
”எந்தப் பூவில் எந்தத் தேனோ..?? என்று பார்ப்பவன் நவீன மனிதன்” – கவிஞர் வைரமுத்து சினிமா

”எந்தப் பூவில் எந்தத் தேனோ..?? என்று பார்ப்பவன் நவீன மனிதன்” – கவிஞர் வைரமுத்து

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் […]

29/04/2024 Inbaaraja
அதிகாரப் பூர்வ அறிவிப்பு ”ஜூன் 27ல்  கல்கி 2898 AD வெளியாகிறது” சினிமா

அதிகாரப் பூர்வ அறிவிப்பு ”ஜூன் 27ல் கல்கி 2898 AD வெளியாகிறது”

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ! இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்காக […]

29/04/2024 Inbaaraja
ரத்னம் விமர்சனம் இது புதிது

ரத்னம் விமர்சனம்

சில பல காரணங்களினால் ப்ரியா பவானி சங்கரை கொல்லத் துரத்தும் ஒரு கூட்டம். ஒரே ஒரு காரணத்திற்காக ப்ரியா பவானி சங்கரைக் காக்க உயிரையும் கொடுப்பேன் என்று எதிர்த்து நிற்கும் விஷால், இந்த இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பின்கதை, இவை தவிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் தெறிக்கும் இரத்தம், இவையெல்லாம் சேர்ந்தது தான் ரத்னம். வேலூர் பகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ “பன்னீர்” ஆக வரும் சமுத்திரக்கனிக்கு அநீதிக்கு எதிரான அண்டர் கிரவுண்ட் வேலைகள் அனைத்தும் செய்பவராக விஷால் […]

28/04/2024 Inbaaraja
ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை சினிமா

ராபர் – தடம் மாறிய இளைஞனின் வாழ்க்கை

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். இப்படத்தின் கதை என்ன? பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் […]

27/04/2024 Inbaaraja
அமோக வரவேற்பைப் பெற்று வரும் “ஸ்டார்” படத்தின் முன்னோட்டம் சினிமா

அமோக வரவேற்பைப் பெற்று வரும் “ஸ்டார்” படத்தின் முன்னோட்டம்

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு […]

27/04/2024 Inbaaraja
பில்லா 2 ரீ ரீலிஸுக்கான காத்திருப்பில் அஜீத் ரசிகர்கள் சினிமா

பில்லா 2 ரீ ரீலிஸுக்கான காத்திருப்பில் அஜீத் ரசிகர்கள்

ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அதிர விடும் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்ஸோடு தலைசிறந்த படைப்பான ‘பில்லா’ படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் திறமையாக மறுஉருவாக்கம் செய்திருந்தார். ‘பில்லா’ படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் இந்தப் படம் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பி பார்க்கும் படமாக இது உள்ளது. இப்போது, ‘பில்லா’ ரீ-ரிலீஸ் என்ற செய்தி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. ​​​​ […]

26/04/2024 Inbaaraja
பிக்பாஸ் ரவீணா-வின் “ஹாப் பாட்டில்” இசை ஆல்பம் சினிமா

பிக்பாஸ் ரவீணா-வின் “ஹாப் பாட்டில்” இசை ஆல்பம்

ES Production & Macha Swag Dance தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். இப்பாடல் இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர் […]

26/04/2024 Inbaaraja
ஒரு நொடி விமர்சனம் இது புதிது

ஒரு நொடி விமர்சனம்

நம் வாழ்வின் ஏதேனும் ஒரு நொடியில் நடக்கும் யதார்த்தமான சம்பவங்கள் எப்படி நம் வாழ்க்கையையே புரட்டிப் போடும் என்பதை மர்மமும் திகிலும் கலந்து சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறது ஒரு நொடி திரைப்படம். கந்துவட்டி கொடுமைகள் மற்றும் நிலமோசடி சம்பவங்களில் ஈடுபடும் கரிமேடு தியாகு (வேல ராமமூர்த்தி) என்பவரிடம் தன் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்காக தன் நிலப்பத்திரத்தை ஒப்படைக்கிறார் சேகரன். ஆறு மாதம் கழித்து வட்டி மற்றும் அசலோடு பணத்தைக் கொடுத்துவிட்டு தன் நிலப்பத்திரத்தை மீட்டு வர […]

25/04/2024 Inbaaraja
” ரெட்ட தல கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்” – அருண் விஜய் சினிமா

” ரெட்ட தல கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும்” – அருண் விஜய்

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது… இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது… ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் […]

25/04/2024 Inbaaraja
”அருண் விஜய் எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார்” – சாம் சி.எஸ் இது புதிது

”அருண் விஜய் எத்தனை வருடமானாலும் இளமையாக அப்படியே இருக்கிறார்” – சாம் சி.எஸ்

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற்கு , “ரெட்ட தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய அசத்தலான ஃபர் ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் பேசியதாவது.. இந்த நாளுக்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் […]

25/04/2024 Inbaaraja
ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள் சினிமா

ஒரு நொடி”-யை பார்க்க தூண்டும் 3 முக்கிய அம்சங்கள்

ஒன்று. தமிழ் திரை வரலாற்றில் முதன் முறையாக ஒரு படத்தையே 13 நிமிட குறும்படமாக காட்டிய அந்த முயற்சி, பலனளித்திருக்கிறது. அந்த பதிமூன்று நிமிடக் காட்சியின் ஒவ்வொரு நொடியும் படம் தொடர்பான சுவாரஸ்யத்தைக் கூட்டுவதோடு, மெய்யாகவே நம்மை இருக்கை நுனிக்கு தள்ளுகின்றன. இரண்டு. த்ரிஷ்யம் திரைப்படத்திற்குப் பிறகு, இப்படத்தின் முடிவு தான் எங்களால் கணிக்க முடியாததாக இருந்தது என்கின்ற தணிக்கை துறையினரின் பாராட்டு. மூன்று. படத்தைப் பார்த்த மறுகணமே, தான் முன் வைக்கும் யோசனைகளைப் பரிசீலிப்பதாக இருந்தால் […]

25/04/2024 Inbaaraja
சிங்கப்பூர் தொழிலாளர்களின் வலியை பேசும் “உழைப்பாளர் தினம்” சினிமா

சிங்கப்பூர் தொழிலாளர்களின் வலியை பேசும் “உழைப்பாளர் தினம்”

சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். […]

25/04/2024 Inbaaraja
கதையைக் கேட்டு ”வேட்டைக்காரி” தலைப்பை சிபாரிசு செய்த வைரமுத்து சினிமா

கதையைக் கேட்டு ”வேட்டைக்காரி” தலைப்பை சிபாரிசு செய்த வைரமுத்து

படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, ‘படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்’ என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், […]

25/04/2024 Inbaaraja