32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 65 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 65)
ரசிகர் மரணம் – நேரில் சென்ற ஜெயம் ரவி சினிமா

ரசிகர் மரணம் – நேரில் சென்ற ஜெயம் ரவி

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.   தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை […]

24/04/2024 Inbaaraja
தீட்டு – ஆண்களுக்கான விழிப்புணர்வு பாடல் சினிமா

தீட்டு – ஆண்களுக்கான விழிப்புணர்வு பாடல்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற […]

24/04/2024 Inbaaraja
ஹனுமன் ஜெயந்தி நாளில் ‘ஜெய் ஹனுமான்’ படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர் சினிமா

ஹனுமன் ஜெயந்தி நாளில் ‘ஜெய் ஹனுமான்’ படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்

ஹனுமன் ஜெயந்தி நன்நாளில், பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர், வெளியிடப்பட்டது! இப்படத்தை ரசிகர்கள் ஐமேக்ஸ் 3டி இல் அனுபவிக்கலாம் !! பிரபல படைப்பாளி பிரசாந்த் வர்மா, பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ஹனுமான் படத்திற்குப் பிறகு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் வர்மா அவரது சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து (PVCU) மற்றொரு சாகச காவியத்தை ரசிகர்களுக்கு கொண்டு வருகிறார். ஜெய் ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் […]

24/04/2024 Inbaaraja
நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா? இது புதிது

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர். […]

24/04/2024 Dinesh R
உயிர் தமிழுக்கு | காதல் நகைச்சுவை அரசியல் சினிமா

உயிர் தமிழுக்கு | காதல் நகைச்சுவை அரசியல்

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் […]

24/04/2024 Inbaaraja
சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன? சினிமா

சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து மண்டைக்கு சூரு ஏறுதே எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய […]

23/04/2024 Inbaaraja
இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள் சினிமா

இனிமேல் ஆல்பம் பாடல் – 10 மில்லியன் பார்வைகள்

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில் உருவான ‘இனிமேல்’ பாடலில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமானார். நடிகையும் இசையமைப்பாளருமான ஸ்ருதி ஹாசனின் வடிவமைப்பில் உருவான இனிமேல் ஆல்பம் பாடல் தற்போது யூடியூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி அன்று வெளியானது இந்தப் பாடல்.  ஸ்ருதி மற்றும் லோகேஷ் ஆகியோரின், ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் நடிப்பில், இந்தப் பாடல், இன்றைய இளைய […]

23/04/2024 Inbaaraja
சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் அயல் சினிமா

சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் […]

23/04/2024 Inbaaraja
சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி சினிமா

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் […]

23/04/2024 Inbaaraja
ப்ரஜன் – இவானா வருண் நடிக்கும் புதிய படம் “ராஞ்சா” சினிமா

ப்ரஜன் – இவானா வருண் நடிக்கும் புதிய படம் “ராஞ்சா”

இளம் திறமைகளை தேடிக் கண்டுபிடித்து திரையுலகில் அறிமுகம் செய்து அடையாளப் படுத்துவதில் முதன்மையாக திகழும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ‘ராஞ்சா’ எனும் புதிய திரைப்படத்திற்காக ஶ்ரீ க்ரிஷ் பிக்சர்ஸ் கி. சாம்பசிவம் உடன் இணைந்துள்ளது. குறும்படம் இயக்கி கவனத்தை ஈர்த்த சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரஜன் மற்றும் இவானா வருண் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். அதிரன் சதீஷ், பத்மன் மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர். திரைப்படம் குறித்து பேசிய […]

23/04/2024 Inbaaraja
அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கும் குறும்படம் சினிமா

அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கும் குறும்படம்

தமிழில் ‘தங்க முட்டை’ மற்றும் தெலுங்கில் ‘பங்காரு குட்டு’ என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி, ஒரு முக்கிய கருத்தை வலியுறுத்தும் சுவாரசியமான குறும்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அரசியலமைப்பின் முக்கியமான‌ தூண்களில் ஒன்றில் மாற்றத்தை பரிந்துரைக்கிறது. ‘தங்க முட்டை’ படத்தில் நாயகனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபுவுக்கு தமிழில் டப்பிங் பேசும் பிரபல நடிகர் சஞ்சீவ் அரசு அதிகாரியாக இந்த குறும்படத்தில் நடிக்கிறார். நடிகை […]

23/04/2024 Inbaaraja
தன் பிறந்தநாளில் தன் தாயாரின் பெயரில் அறக்கட்டளை துவங்கிய நடிகர் உதயா சினிமா

தன் பிறந்தநாளில் தன் தாயாரின் பெயரில் அறக்கட்டளை துவங்கிய நடிகர் உதயா

தன் பிறந்தநாளை முன்னிட்டு தன் தாயாரின் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை துவங்கியுள்ள நடிகர் உதயா அது தொடர்பான செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். […]

23/04/2024 Inbaaraja
”இறவா சாபம் பெற்ற அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன்” -கல்கி 2898 AD அப்டேட் சினிமா

”இறவா சாபம் பெற்ற அஸ்வத்தாமனாக அமிதாப்பச்சன்” -கல்கி 2898 AD அப்டேட்

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் […]

23/04/2024 Inbaaraja
ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம் இது புதிது

ஃபைண்டர் புராஜக்ட் – 1 விமர்சனம்

எந்தவித குற்றமும் செய்யாமல் சிறைக்குள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளின் நிலையைப் பற்றி பேசுகிறது ஃபைண்டர் திரைப்படம். குற்றவியல் தொடர்பான படிப்பில் முதுகலை பெற்ற மாணவர்கள் சிலர் இணைந்து தனியார்மயமான துப்பறியும் நிறுவனம் ஒன்றை துவங்குகிறார்கள். இவர்களுக்கு அவர்கள் படித்த அதே கல்லூரியில் படித்து விட்டு தற்போது அரசுத்தரப்பு வக்கீலாக பணியாற்றி வரும் நிழல்கள் ரவி உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். குற்றம் இளைக்காமல் சூழ்நிலை காரணமாக சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நிரபராதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்பதை […]

21/04/2024 Inbaaraja
நாங்கள் பார்த்ததிலேயே வித்தியாசமான த்ரில்லர் “ஒரு நொடி” – தணிக்கை குழு பாராட்டு சினிமா

நாங்கள் பார்த்ததிலேயே வித்தியாசமான த்ரில்லர் “ஒரு நொடி” – தணிக்கை குழு பாராட்டு

தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஒரு நொடி’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகரும், அரசியல்வாதியும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா, எழுத்தாளரும், நடிகருமான வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட […]

21/04/2024 Inbaaraja