பேசுபொருளான ‘இனிமேல்’ ஆல்பம் பாடல்
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு பாடலை அறிவித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் RKFI இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி லோகேஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'இனிமேல்' பாடல் நவீன நகர்ப்புற ரிலேஷன்ஷிப்பில், காதலின் அனைத்து நிலைகளையும் அதன் ஏற்ற இறக்கங்களுடன் சித்தரிக்கும் பாடலாகும். ஸ்ருதி ஹாசன் பாடி, இசையமைத்துள்ள ‘இனிமேல்’ பாடலை, கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் தற்போதைய தலைமுறையில் காதல் இயங்கும் விதத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ மற்றும் ‘மான்ஸ்டர் மெஷின்’ போன்ற வெற்றிகரமான சுயாதீன ஆல்பம் பாடல்க...