Shadow

திரைச் செய்தி

இயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

இயக்குனர் வெற்றிமாறனின் IIFC-சார்பில் வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி!

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகம்[IIFC] சார்பில் சமீபத்தில் அகால மரணம் அடைந்த வெற்றி துரைசாமிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு,இயக்குனர் வெற்றிமாறன்,அவரது மனைவி ஆர்த்தி வெற்றி மாறன்,பேராசிரியர் ராஜநாயகம், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார், மருத்துவர் வந்தனா,ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முதலாவதாக பேசிய பேராசிரியர் ராஜநாயகம்," கையறு நிலையில் துக்கமான சூழ்நிலையில்,இந்த பன்னாட்டு திரை-பண்பாடு ஆய்வகத்தின் முதுகெலும்பாக, இருபெரும் தூண்களில் ஒரு பெரும் தூணாக இருந்த வெற்றி துரைசாமியின் எதிர்பாராத மறைவு அஞ்சலி செலுத்த ஆற்றல் குன்றிய சூழலானாலும், இந்த ஆய்வகத்திற்கு அவர் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அவரது மறைவை அவரது குடும்பத்தினர்,இந்த சூழலை கடந்து வர தேவையான ஆற்றலை இறைவன் அளிக்க வேண்டும்.வெற்ற...
”சினிமா தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்” – மேகா ஷெட்டி

”சினிமா தொழில் என்பதையும் தாண்டி இது என்னுடைய காதல்” – மேகா ஷெட்டி

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தனது நேர்த்தியான வசீகரத்தாலும் பன்முகத் திறனாலும் பார்வையாளர்களைக் கவரும் திறன் கொண்ட நடிகைகள் மிகக் குறைவு. அப்படியான நடிகைகள் திரையில் பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிப்பார்கள். தமிழ் மொழியின் மீதான அவர்களின் தேர்ச்சி ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொடர் முயற்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. தமிழ் அல்லாது வேறு மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த ஜோதிகா, நஸ்ரியா மற்றும் பலர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவுக்கான புதுவரவாக நடிகை மேகா ஷெட்டி இணைந்துள்ளார்.கன்னட சினிமாவில் இருந்து வந்த மேகா ஷெட்டி, சினிமா கலையின் மீதான தனது அசைக்க முடியாத ஆர்வத்தை பல்வேறு தருணங்...
ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் ஆக்சன் எண்டர்டெயினர் பூஜையுடன் துவங்கியது

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் அடுத்த பிரம்மாண்டம், யில் உருவாகும் புதிய திரைப்படம்,  ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது.தமிழ் திரையுலகில், பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இந்த ஆக்சன் படத்தின் அறிவிப்பே, ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பணிகள் துவக்கப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி, ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. ...
விரைவில் தமிழில் ரீலீஸ் ஆகும் மம்முட்டியின் “பிரமயுகம்”

விரைவில் தமிழில் ரீலீஸ் ஆகும் மம்முட்டியின் “பிரமயுகம்”

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நடிகர் மம்முட்டியின் 'பிரமயுகம்' திரைப்படம் பிப்ரவரி 15 அன்று மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது...விரைவில் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது!கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் 'பிரமயுகம்' திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த 'பிரமயுகம்' படத்தை, 'பூதகாலம்' புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற ...
””காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது” – நடிகர் மோகன்

””காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது” – நடிகர் மோகன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'ஹரா' படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறதுஇந்த நிலையில் தன் அடுத்த படத்தின் தலைப்பு "காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது" என்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டார்.ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறது....
”மாமா குட்டிமா” ஆல்பம் பாடல் புரோமோ வெளியானது

”மாமா குட்டிமா” ஆல்பம் பாடல் புரோமோ வெளியானது

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் "மாமாகுட்டிமா" புரோமோ வெளியாகியுள்ளது.லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார்.விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர் பொத்துவில் அஸ்மின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', அஜித் குமார் நடித்த 'விஸ்வாசம்' உள்ளிட்ட படங்களுக்கு எழுதிய ...
Valentine’s Day Cheers சொன்ன ”பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழு

Valentine’s Day Cheers சொன்ன ”பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழு

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில், Valentine's Day Cheers என வெளியிட்டுள்ளனர்!ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்' 'ஐ ஆம் ...
மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

மீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”

சினிமா, திரைச் செய்தி
 90-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்டராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது.நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில்‌ “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின்‌ “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள்.திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் வேதிகா, அவருடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும் இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறினார்.BLUE HILL FILMS BANNER-ல் ஜோபி பி சாம் தயாரிக்க, SJ Sinu இயக்கியிருக்கிறார். கதை திரைக்கதையை எழுதியிருப்பது தினி...
விஜய்சேதுபதி வெளியிட்ட கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட முதல் பார்வை!

விஜய்சேதுபதி வெளியிட்ட கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட முதல் பார்வை!

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.இக்கதையில் காவல் கட்டுபாட்டு மை...
எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !!

எட்டுத்தோட்டாக்கள் வெற்றி நடிக்கும் ஆலன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு !!

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.ஆலன் என்பதன் பொருள் படைbபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R....
நகரின் மையப்பகுதியில் ஹெலிகாப்டரின் சாட்சியாக

நகரின் மையப்பகுதியில் ஹெலிகாப்டரின் சாட்சியாக

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
சென்னை சத்யம் திரையரங்கில் முதல் முறையாக ஒரு திரைப்பட விளம்பரத்திற்காக ஹெலிகாப்டர்  வைக்கப்பட்டிருக்கிறது!ஒரு அற்புதமான விளம்பர நிகழ்வு, நகரத்தை எதிர்பார்ப்புடன் திகைக்க வைத்துள்ளது, சென்னை தனது முதல் ஹெலிகாப்டரை பெருமையுடன் பிவிஆர் சத்யம் சினிமாஸில் வெளியிடுகிறது.மேடம் வெப் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது! பிப்ரவரி 16, 2024 அன்று, இந்த விளம்பர ஸ்டண்ட் உற்சாகத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவிருக்கின்றது. இந்த நகரமானது வாழ்க்கையை விட பெரிய விளம்பரத்திற்கான பின்னணியைக் கொண்டு இருப்பதால், அனைவரின் கண்களுக்கும் வசீகரிக்கும் ஹெலிகாப்டர் அறிமுகமாகிறது.ஹெலிகாப்டரின் இருப்பு ஒரு காந்த சக்தியாக செயல்படப் போகிறது, இளைஞர்களையும் ஈர்க்க விருக்கிறது....
”நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம்.” – சந்தானம்

”நாத்திகரோ ஆன்மீகவாதியோ நீங்கள் எப்படி இருந்தாலும் அந்த கண்ணோட்டத்தில் படம் பார்க்கலாம்.” – சந்தானம்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
 பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இதன் தேங்க்ஸ் மீட்  சென்னையில் நடந்தது.கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர். ...
மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி.அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள்.பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.டோனி பிரிட்டோ இசையமைக்க,  ...
அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது.இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள...
சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

சினிமாவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கான ப்ளாட்பார்ம் “ஸ்டார்டா”

திரைச் செய்தி, திரைத் துளி
தமிழ் திரையுலகின் எல்லை விரிவடைந்துக் கொண்டேச் செல்கிறது. தற்போது தமிழ் திரைப்படங்களுக்கு உலகளவிலான அங்கீகாரமும், வணிகமும் இருக்கிறது. தமிழில் அறிமுகமாகும் இளம் படைப்பாளிகளும்.. வித்தியாசமான ஜானரில் தங்களுடைய படைப்புகளை உருவாக்கி கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். ஏராளமான புதிய கலைஞர்களும் தங்களுடைய திறமைகளை சமூக ஊடகங்களிலும், சமூக வலைத்தளப்பக்கங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இலக்கும் திரைத்துறையில் நுழைந்து நட்சத்திரமாக ஜொலிக்கவேண்டும் என்பதாகவேயிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான அணுகுமுறை.. அவர்களுக்கு தெரிவதில்லை. திரைத்துறையில் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடுவதிலேயே அதிக காலத்தை செலவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கும், படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் இடையே வாய்ப்பிற்கான பாலத்தை உருவாக்கும் எண்ணத்திலும் தான் ‘ஸ்டார்டா’ என...