Shadow

திரை விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை. குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள். ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்டு ...
தர்மதுரை விமர்சனம்

தர்மதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும் பலம் பொருந்திய அமைப்புகளான குடும்பமும் சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான சில விதிமுறைகளை வைத்துள்ளன. அது, தனி நபர்களால் மீறப்படும் பொழுது, அமைப்பின் கண்ணுக்குத் தெரியா அதிகாரம் தனி நபர் விருப்பத்தை நசுக்க முயற்சி செய்யும். தனி நபரான தர்மதுரை, அவ்வமைப்புகளிடம் சிக்கி எப்படி மீள்கிறான் என்பதே படத்தின் கதை. காமராஜ் எனும் மருத்துவப் பேராசிரியராக ராஜேஷ் நடித்துள்ளார். முனியாண்டி என்ற இயற்பெயர் கொண்டவர், காமராஜரின் சத்துணவுத் திட்டத்தால் பயன்பெற்றவர் என்ற நன்றிக்காகத் தன் பெயரையே மாற்றிக் கொள்கிறார். ராஜேஷின் முதுகுக்குப் பின், 'முனியாண்டி' என சில மாணவர்கள் கத்துகின்றனர். அதனால் சுர்ரெனக் கோபம் வந்து விடுகிறது அமைதியை விரும்பும் சக மாணவரான தர்மதுரைக்கு. கத்திய ஹஸனின் மண்டையை உடைத்து விடுகிறார். முனியாண்டி என்ற பெயரோ, கபாலி என்ற பெயரோ உச்சரிக்கப்படக் கூடாத கேலிக்குரிய பெயரா என்ன!? 'ஹஸன் தா...
யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

யானைமேல் குதிரை சவாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தம்பியோடு வாழும் ஏழைப் பெண்ணின் திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. ‘கதை தான் என் படத்தில் ஹீரோ’ என இயக்குநர் முடிவு பண்ணதால், நாயகன் இல்லாப் படமிது. அக்குறையைத் தீர்க்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘வழக்கு எண்’ முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி என நான்கு கதாபாத்திரங்களைக் கொண்டு ஒப்பேத்தியுள்ளார். 'நான் கடவுள்' ராஜேந்திரனும், 'லொள்ளு சபா' சுவாமிநாதனும் காமெடி வில்லன்கள். தன் பட்டுத் தறியில் வேலை செய்யும் பெண்களைப் படுக்கைக்குக் கூப்பிடுவது 'காமெடி'யாம், விருப்பமில்லா நாயகியை அடைய நினைப்பது வில்லத்தனமாம். முத்துராமனுக்கும் படத்தில் அதே கதாபாத்திரம்தான். ஆனால், நம்பியாரை வழிபடும் இவர் சோலோ காமெடி வில்லன்; சுவாமிநாதனும் ராஜேந்திரனும் ஜோடி. படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துபவராக கிருஷ்ணமூர்த்தி மட்டுந்தான் படம் நெடுகே பயணிக்கிறார். படத்தின் முடிவில் அதற...
வாகா விமர்சனம்

வாகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார். நாயகியாக ரன்யா ராவ். கதாபாத்திரத்தின் பெயர் காணம் என்றாலும், நாயகன் காஜல் எனப் பெயரை மாற்றிக் கொள்கிறான். ஏன் காஜல் என்ற பெயரை நாயகிக்குச் சூட்டுகிறான்? காணம் என்ற பெயருக்கு என்னக் குறைச்சலென்றும் தெரியவில்லை. இத்தகைய குழப்பமும், தெளிவின்மையும் திரைக்கதை நெடுகேயும் உள்ளது. கண்டதும் காத...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள...
என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை. விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பே...
திருநாள் விமர்சனம்

திருநாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் 'நீயா? நானா?' கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி "என்கவுன்ட்டர்" மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா வ...
நமது விமர்சனம்

நமது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி. அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடித்...
ஜேசன் பார்ன் விமர்சனம்

ஜேசன் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன். தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமுகத...
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்...
கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செல்...
கபாலி விமர்சனம்

கபாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் (ரஜினியின் ‘சிவாஜி’ படம் ஓர் எடுத்துக்காட்டு!) அதுவும் கல்யாணத்துக்கு முன்பான கவர்ச்சியோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால், நரை கண்ட கபாலிக்கு எப்பொழுதும் தன் மனைவியின் ஞாபகம்தான். ‘தன் மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா?’ என்பதே தெரியாமல், கபாலியாக ரஜினி காட்டும் சங்கடமும் வேதனையும் மிக அற்புதம். ரஜி...
ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்

ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டேக்சி ட்ரைவரான பாண்டிக்கு, எஃப்.எம்.இல் பணி புரியும் ஏஞ்சலாவினுடைய குரல் ராஜ போதையைத் தருகிறது. தினம் இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை ஏஞ்சலாவின் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்தப் போதை பாண்டியிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. பையா போலொரு ரூட் மூவியாகப் போகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல் பாதி. அப்படியில்லை என இடைவேளையிலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகின்றனர். 96 நிமிடங்களே ஓடக் கூடிய சின்ன படம்தான். ஆனாலும், திரைக்கதையோ வசனமோ கதையின் விறுவிறுப்பை, சஸ்பென்ஸைத் தக்க வைக்க உதவாதது மிகப் பெரும் குறை. ஆனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத க்ளைமேக்ஸை மட்டும் யூகிக்க முடியாதபடி வைத்துள்ளார் இயக்குநர் விஜய் ஷண்முகவேல் அய்யனார். படம் தொடக்கத்தில் லிவிங்ஸ்டனைப் பார்த்ததுமே ஓர் உற்சாகம் எழுகிறது. அவரையும் அப்படியே ஓரங்கட்டி விடுகின்றனர். படத்தில், ஏசி Vs டி...
ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை. 2002 இல் வெளியிடப்பட்ட முதல் ஐஸ் ஏஜ் படத்தில் இருந்தே வரும் மரபுப்படி, இப்படமும் ஸ்க்ராட் எனும் அணிலின் ஓக் கொட்டை மீதான காதலுடனே தொடங்குகிறது. இம்முறை ஓக் கொட்டையைப் புதைக்கும் முயற்சியில், பனியில் புதையுண்டு கிடக்கும் வேற்றுக்கிரகவாசியின் விண்கப்பலை உயிர்ப்பித்து விடுகிறது ஸ்க்ராட...
தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் நு...