Shadow

திரை விமர்சனம்

தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திர...
றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த 'மாஸ் ஹீரோ' படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன். கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். 'வாவ்.. வாட் எ மேன்!' எ...
ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத்துவர் காவ்யா மீது கண்டதும் காதல் கொள்கிறான் நடிகராகும் முயற்சியிலுள்ள எஸ்.கே. காதலில் வெற்றியடைய வேலையில்லா எஸ்.கே. எடுக்கும் தொடர் முயற்சிகள் தான் படத்தின் கதை. வழக்கமான ரோட் சைட் ரோமியோ தான் எஸ்.கே.வும். எதைப் பார்த்து ‘லவ்’ வந்தது என தமிழ்ப்பட நாயகனிடம் கேட்டால், ‘முகத்தைப் பார்த்து லவ் பண்ணலை. மனசைப் பார்த்து லவ் பண்ணேன்’ எனச் சொல்வார்கள். ‘ஏன் லவ் ஃபெயிலியர் ஆச்சு?’ எனக் கேட்டால், ‘இந்தப் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுக்கவே முடில’ என பாரில் (Bar) பெண்களைத் திட்டிப் பாட்டு பாடுவார்கள். முதலில் என்ன புரிந்ததோ, பின் என்ன புரியாமல் போனதோ?? தமிழ்ப் பட இயக்குநர்களுக்கே வெளிச்சம்! ஆனால், இப்படத்தில் எஸ்.கே.விற்குக் காவ்யாவின் முகத்தைப் பார்த்தோ, மனதைப் பார்த்தோ காதல் வருவதில்லை. மன்மதன் (Cupid) அம்பெய்து காதல் வரச் செய்து விடுகிறார். அதுவரை பெண்கள் விஷயத்தில் எஸ்.கே. சின்னத் தம்பி பிரபு போல...
M.S.தோனி விமர்சனம்

M.S.தோனி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்கு மட்டுமில்லாமல், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’-க்கும் கேப்டனாக இருந்து, தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமானவர் நாயகன் தோனி. தமிழகத் திரையரங்குகளில் ரசிகர்கள் ‘விசில் போட்டு’ உற்சாகத்தில் மிதக்க இந்தவொரு காரணம் போதாதா? பயோபிக் வகை படமென இதைக் கூற முடியாது. அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டும் விடுகின்றனர். நாயகனை வியந்தோதும் மற்றுமொரு இந்தியப் படமே! ஆனால், சமகால விளையாட்டு வீரரைப் பற்றிய படம் என்பதே அனைத்து விசேஷங்களுக்குமான காரணம். இந்தப் படம், அதீத பாசிடிவ் எனர்ஜியைத் திரையரங்குகளில் பரப்புகிறது. தோனியின் வெற்றி என்பது இந்திய அணியின் வெற்றி, இந்தியாவின் வெற்றி எனப் படம் முடிந்தாலும், இது தோனி மீது நம்பிக்கை வைத்திருந்த அவரது நண்பர்களின் வெற்றியாகவே மனதில் ஆழப் பதிகிறது. ‘தோனி கீப்பிங்கிற்கு சரிபடுவான்’ எனக் கணிக்கிறார் அவரது பயிற்சியாளர். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்பொழுது, கண்...
கள்ளாட்டம் விமர்சனம்

கள்ளாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாப நோக்கத்தோடு சட்ட விரோதமாக ஆடுவதும்; உண்மையில்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் ஆகும். வில்லனான ஏழுமலை முன்னதையும், அதைத் தோற்கடிக்கும் முயற்சியில் நாயகன் தமிழரசன் பின்னதையும் ஆடுகின்றனர். வெற்றி யாருக்கு என்பதே படத்தின் கதை. ஒரு சிறுமியின் அழகான முகத்தில் இருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தாக்கம் மறையும் முன், ஒரு விபத்தின் மூலமாக படம் வேகம் எடுக்கிறது. சிறுமியின் தந்தையான மகேந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. திக்கற்று கதி கலங்கிப் போயிருக்கும் மகேந்திரனுக்கு அக்கறையோடு உதவுகிறார் இன்ஸ்பெக்டர் தமிழரசன். உதவ வந்த இன்ஸ்பெக்டருக்கு அதனால் இக்கட்டு நேருகிறது. மகேந்திரனாக ரிச்சர்ட்டும், தமிழரசனாக நந்தாவும் நடித்துள்ளனர். கள்ளாட்டம் ஆடும் நந்தா தான் படத்தின் நாயகன். நந்தா காட்டும் விறைப்பும் தீவிரமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையையும் மனநிலையையும் கச்சிதம...
ஆண்டவன் கட்டளை விமர்சனம்

ஆண்டவன் கட்டளை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை. போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய்...
தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு. சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவியை...
சதுரம் 2 விமர்சனம்

சதுரம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைக்காலஜிக்கல் த்ரில்லர்களான ‘சா (SAW)’ தொடர் படங்களால் ஈர்க்கப்பட்டு, அந்தப் படத்தின் கருவை எடுத்தாண்டு, பிளான்த்ராஃபிக்கல் த்ரில்லர் (Philanthropical thriller) என்ற வகைமைக்கு சதுரம் 2 படத்தை மாற்றி உருவாக்கிள்ளனர். சதுர வடிவிலான அறையில் மருத்துவர் வாசுதேவனும், புகைப்படக் கலைஞர் ஒருவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். அங்குக் கிடைக்கும் துப்புகளைக் கொண்டு, அவ்விருவராலும் சதுரத்தில் இருந்து வெளியேற முடிகிறதா இல்லையா என்பதே படத்தின் கதை. ஸ்லாஷர் (slasher) வகை படங்கள், தமிழுக்குத் தேவையா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது ரத்தக் களறியுடன் ஒருவரைக் கொடூரமாக அறுத்து கொலை செய்யப்படுவதாகச் சித்தரிக்கும் படங்களை ஸ்லாஷர் படங்கள் எனலாம். ஆனால், பெரும்பாலான ஹீரோயிசம் மிகுந்த (மலிந்த) மாஸ் படங்கள் கிட்டத்தட்ட ஸ்லாஷர் படங்கள் போன்றே காட்சியளிக்கின்றன. இப்படமோ மிக லாவகமாக சென்சா...
பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பகிரி என வாட்ஸ்-அப்பை (WhatsApp) மொழிபெயர்த்துள்ளனர். காதலை நாயகனும் நாயகியும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றனர்; சமூக விஷயங்களை குழுவில் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஆக, இப்படி வாட்ஸ்-அப்பில் உணர்வுகளும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதால், வாட்ஸ்-அப் ‘பகிரி’ ஆனது போலும்! (படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் பெயர் ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’. உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் அந்நிறுவனத்தின் பெயர் அதேதான். பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தகவல் பரிமாற்றச் செயலியான ‘வாட்ஸ்-அப்’-பை எல்லா மொழியிலும் அப்படியே அழைக்கப்படுவதுதான் நியாயம்). நாஸ்மாக்கில் வேலை செய்யவேண்டும் என்பது முருகனின் லட்சியம். அதற்கு லஞ்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவனது இந்த உன்னத லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. நாஸ்மாக் (NASMAC) என்பதன் விரிவாக்கம், ‘நம்மூர் சோமபானம் மார்க்க...
இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...
வாய்மை விமர்சனம்

வாய்மை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வாய்மை – உண்மை தவறாத நிலை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், பெண் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதில்லை. ஆனால், அப்படியொரு சூழல் ஏற்படும் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. நீதிபதி 12 பேர் கொண்ட ஜுரி குழுவிடம் அவ்வழக்கை ஒப்படைக்கிறார். அவர்கள் எடுக்கும் முடிவே வழக்கின் தீர்ப்பும்படத்தின் முடிவாகும். கோயில் அறங்காவலர், ஐ.பி.எஸ். அதிகாரி (திருநங்கை), பெண் விமானி, ஓய்வு பெற்ற இராணுவ கர்னல், ரோஸ் ஐ.ஏ.எஸ்., நாடக எழுத்தாளர், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர், கோடீஸ்வரி, அயல் நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பண்டிதர், தத்துவவியலாளர் போன்ற வேறுபட்ட துறையினைச் சேர்ந்த பன்னிரெண்டு பேர் கொண்ட ஜூரி குழு அது. அவர்களுக்குள் உரையாடி, ஏக மனதாக எடுக்கும் முடிவே உறுதியானது. ஒருவர் முரண்பட்டாலும் அந்தத் தீர்ப்பு செல்லாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு அறைக்குள்ளேயே நிகழ்கிறது. ஆனால், அந...
குற்றமே தண்டனை விமர்சனம்

குற்றமே தண்டனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு சொற்களாலான தலைப்பிலேயே படத்தின் முழுக் கதையும் சொல்லிவிட்டார் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன். படத்தில் மிகக் குறைவான கதாபாத்திரங்கள், நான்கைந்து லோக்கேஷன்கள் தான் என்றாலும் மிக நிறைவான படம். இவ்வாறான நேர்த்தியான படங்களின் வரவு அதிகமாக வேண்டும் என்ற ஆவலாதியை ஏற்படுத்துகிறது. இயக்குநர் மணிகண்டன் ஒதுங்கி நின்று நம் மனதோடு அழகாய் கண்ணாமூச்சி விளையாடுகிறார். இளம்பெண் ஒருத்தி இறந்து விடுகிறாள். அவரைக் கொன்றது யாரெனச் சொல்லாமல் நம் முடிவுக்கே படத்தின் முடிவை விட்டுவிடுகிறார். குற்றவாளி யாரெனத் தெரியாத அக்கொலை வழக்கிற்கு, அருண் என்பவனை காவல்துறையினர் பலிகடாவாக்குகின்றனர். ஆனால், சந்தேகத்தின் பலனை அருணுக்குப் பார்வையாளர்களும் அளித்துவிடக் கூடாதென, மக்களின் கூட்டு மனசாட்சிக்கு ஒரு 'செக் (check)' வைக்கிறார். அருண் பணக்காரத் திமிர் கொண்டு பெண்கள் பின்னாடி சுற்றும் ஊதாரி இளைஞனெனச் சொல்லி விட...
கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை. மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது. கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில...
கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை விமர்சனம்

கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆம். படத்தின் பெயரே, 'கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்பதுதான். 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' என்ற தலைப்பு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளதால், படத்தின் பெயரிலேயே கவுண்டமணியைச் சேர்த்துவிட்டனர் படக்குழுவினர். இப்படத்தின் பெயர் ஒன்றே போதுமே, இப்படம் எப்படிப்பட்டதென யூகிக்க! சர்வம் கவுண்டர் (Counter) மயம். காதல் ஜோடிகளுக்கு சாதி, அந்தஸ்து, பெற்றோர்கள் இன்னபிற என அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கல்யாணம் செய்து வைப்பவர் கேரவன் கிருஷ்ணன். மதுரை வாழ் அரசியல்வாதி விஸ்வநாதனின் மகளுக்கு எப்படி எதிர்ப்புகளை மீறிச் சேர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. அறிமுக பாடல், க்ளைமேக்ஸ் ஃபைட் என கவுண்டமணியை முழுமுதற் ஹீரோவாக்கியுள்ளார் இயக்குநர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ஒடுங்கிய தேகமும், இடுங்கிய முகமும், சோர்வான பார்வையும் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், அவர் தனது குரலினாலு...
பயம் ஒரு பயணம் விமர்சனம்

பயம் ஒரு பயணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய்ப் படங்கள், காமெடிப் படங்களாக மாறி மிகுந்து விட்ட சூழலில் முழு நீள ‘சீரியஸ்’ பேய்ப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிஷர்மா. தன்னைக் கொன்றவர்களைப் பட்டெனக் கொன்றுவிடும் பேய், நாயகனை மட்டும் பயமுறுத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் ஏன், எதற்கு அப்படிச் செய்கிறது என்றும், நாயகனின் நிலை என்னானது என்பதும்தான் படத்தின் கதை. பரத் ரெட்டி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். மகளின் அன்பையும், மகள் மீது அன்பு செலுத்துவதைப் பெரும்பேறாகக் கருதும் பாசமுள்ள தந்தையாகவும் உலா வந்துள்ளார் பரத். படத்தின் மையக்கருவே, மகள் மீது தந்தை கொண்ட அன்புதான் என்றும் சொல்லலாம். தந்தை மகள் மீது காட்டும் பாசம், படத்தில் வரும் கிளைக்கதையிலும் மையக்கருவாக வருகிறது. விஷாகா சிங்கின் தந்தையாக நடித்தி...