Shadow

திரை விமர்சனம்

ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்

ஒன்பதிலிருந்து பத்துவரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கால் டேக்சி ட்ரைவரான பாண்டிக்கு, எஃப்.எம்.இல் பணி புரியும் ஏஞ்சலாவினுடைய குரல் ராஜ போதையைத் தருகிறது. தினம் இரவு ஒன்பதிலிருந்து பத்து வரை ஏஞ்சலாவின் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அந்தப் போதை பாண்டியிடம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. பையா போலொரு ரூட் மூவியாகப் போகுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல் பாதி. அப்படியில்லை என இடைவேளையிலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகின்றனர். 96 நிமிடங்களே ஓடக் கூடிய சின்ன படம்தான். ஆனாலும், திரைக்கதையோ வசனமோ கதையின் விறுவிறுப்பை, சஸ்பென்ஸைத் தக்க வைக்க உதவாதது மிகப் பெரும் குறை. ஆனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத க்ளைமேக்ஸை மட்டும் யூகிக்க முடியாதபடி வைத்துள்ளார் இயக்குநர் விஜய் ஷண்முகவேல் அய்யனார். படம் தொடக்கத்தில் லிவிங்ஸ்டனைப் பார்த்ததுமே ஓர் உற்சாகம் எழுகிறது. அவரையும் அப்படியே ஓரங்கட்டி விடுகின்றனர். படத்தில், ஏசி Vs டி...
ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை. 2002 இல் வெளியிடப்பட்ட முதல் ஐஸ் ஏஜ் படத்தில் இருந்தே வரும் மரபுப்படி, இப்படமும் ஸ்க்ராட் எனும் அணிலின் ஓக் கொட்டை மீதான காதலுடனே தொடங்குகிறது. இம்முறை ஓக் கொட்டையைப் புதைக்கும் முயற்சியில், பனியில் புதையுண்டு கிடக்கும் வேற்றுக்கிரகவாசியின் விண்கப்பலை உயிர்ப்பித்து விடுகிறது ஸ்க்ராட...
தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் நு...
அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்ச நடிகரான பவர் ஸ்டாருக்கு, மதுரையில் அதி தீவிர ரசிகர்களாக சிம்மக்கல் சேகர், கோரிபாளையம் ரஹமத், பழங்காநத்தம் பாபு ஆகியோர் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி, ‘பாகுபலியும் பாயும்புலியும்’ என்ற பவர் ஸ்டாரின் படத்தை மதுரை ஏரியா வினியோகத்திற்கு எடுத்து ஓட்டாண்டி ஆகுகின்றனர். தன் உயிரினும் மேலான தலைவனைப் போய்ப் பார்க்கின்றனர். தலைவரோ உதாசீனப்படுத்தி விட, அவமானப்படுத்தப்படும் மூன்று ரசிகர்களின் எதிர்வினை தான் படத்தின் கதை. ‘பாட்ஷா’ பட ரஜினி பாணியில் அறிமுகமாகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். பின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரையும் ‘ஸ்பூஃப்’ செய்யும் காட்சிகள் வருகிறது. தொடக்கத்தில் இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் அதன் பின் தடுமாறத் தொடங்கி, அதையே கடைசி வரை செய்கிறது. ‘ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குலோத்துங்க..’ என நீளமான பெயர் தாங்கிய மருத்துவராக மன்சூர் அலி கான் ...
தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்று யோசித்ததுண்டா? அதுதான் இப்படத்தின் கதை. தன்னை வளர்க்கும் கேட்டி மீது மேக்ஸ் எனும் டெர்ரியர் வகை நாய்க்கு மிகுந்த அன்பு. கேட்டி வெளியில் செல்லவே விடாமல் அட்டகாசம் செய்யும் மேக்ஸ். இப்படி நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில், ட்யூக் எனும் பெரிய நாயை வீட்டிற்குக் கொண்டு வருகிறாள் கேட்டி. தனக்கும் கேட்டிக்கும் இடையில் ஒன்றை மேக்ஸால் ஏற்றுக் கொள்ளவே முடியலை. ட்யூக்கை எப்படியாவது விரட்டப் பார்க்கிறது. ட்யூக்கிற்கு அது தெரிந்து விடுகிறது. பூங்காவிற்கு வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, மேக்ஸை பூங்காவை விட்டு வெளியில் அழைத்துச் சென்று விடுகிறது ட்யூக். முதலில், இருவரும் பெரும் பூனைப் படையிடம் சிக்கிக் கொள்கின்றனர்; அடுத்து, ‘அனிமல் கன்ட்ரோல்’ அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறார்...
அர்த்தநாரி விமர்சனம்

அர்த்தநாரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளனர்...
பைசா விமர்சனம்

பைசா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குப்பை பொறுக்கும் தொழிலாளியான முருகனுக்கு அடையாறு நதிக் கரையோரமாக 100 கோடி ரூபாய் கிடைக்கின்றது. அந்தப் பணம் அவனைப் படுத்தும் பாடு அல்லது அவனுக்குள் நேரும் அகப்போராட்டம் தான் படத்தின் கதை. முதல்முறையாகத் தனி நாயகனாக நடித்துள்ளார் ஸ்ரீராம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாமல் போகிறதென வருந்தும் முருகனுக்கு, சாலையில் கிடைக்கும் 3000 ரூபாய் பெரிதாகப் படவில்லை. ஆனால், 100 கோடியைப் பார்த்ததும் அவன் மனம் சபலமுறுகிறது. தனது பேன்ட்டின் கிழிசலை 1000 ரூபாய் தாள் கொண்டு அடைக்குமளவு போதை தலைக்கேறுகிறது. முருகனாக ஸ்ரீராம் நன்றாக நடித்துள்ளார். ஆனால், காதலோடு சிரிக்கும் பொழுதுதான் கொஞ்சம் பொழுதுதான் லேசாகத் தடுமாறுகிறார். டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் பணி புரியும் வேணியாக அறிமுகமாகியுள்ளார் ஆரா. அவருக்கு எல்லாவிதமான ஆடையும் பொருந்துகிறது. முருகன், வேணிக்குள்ளான காதல் அத்தியாயம் மிக யதார்த்...
வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

வில்லாதி வில்லன் வீரப்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது சந்தன மரக் கடத்தல் வீரப்பனைப் பற்றிய படமில்லை. ராம்கோபால் வர்மாவின் படம். 900 யானைகளையும், 97 போலீஸ்காரர்களையும் கொன்ற வீரப்பனைப் பிடிக்க போலீஸார் நடத்திய "ஆப்ரேஷன் குக்கூன்" பற்றி மட்டுமே அலசுகிறது 'வில்லாதி வில்லன் வீரப்பன்' திரைப்படம். வீரப்பனை வீழ்த்த போலீஸ் எடுத்துக் கொண்ட கடைசிக் கட்ட முயற்சிகளைத் திரைக்கதையாக்கியுள்ளார். வீரப்பனைப் பிடிப்பதற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 734 கோடிகளாம். இப்படி, வீரப்பனைப் பற்றி வெளியில் இருந்து, செய்திகள் மூலமே அறிந்த ராம்கோபால் வர்மா, வீரப்பனை எப்படி அணுகியுள்ளார் என்பது படம் பார்ப்பதற்கு முன் அறிவது மிக அவசியமாகிறது. "செப்பல் அணிந்து கொண்டு, கையில் டபுள் பேரல் கன் (double barrel gun) ஏந்திக் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா என இரண்டு மாநில அரசுகளுக்கும் சிம்மச் சொப்பனமாக இருந்துள்ளார் வீரப்பன். ஆசியாவின் மிக ஆபத்தான மனிதர் இவர்தான். ஏன் உலகத்திலேயே ...
அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன். ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், 'நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்' எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி. ‘சின...
இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம்

இண்டிபெண்டன்ஸ் டே: ரீசர்ஜென்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வேற்றுக் கிரகவாசிகளின் தாக்குதல்களில் இருந்து மீண்டு, மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு பூமி வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்னறிவிக்க வேற்று கிரகவாசிகள் விட்டுச் செல்லும் தொழில்நுட்பத்தையே உபயோகித்து, ESD (எர்த் ஸ்பேஸ் டெஃபன்ஸ்) என்ற அமைப்பை உருவாக்குகிறது ஐக்கிய சபை. அவ்வமைப்பை, செவ்வாய் கிரகத்திலும் நிலவிலும் ரேயாவிலும் (சனி கிரகத்தின் துணைக்கோள்) அமைத்து, கண்காணிப்பு வேலையைச் செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன், வேற்றுக்கிரகவாசிகள் தோற்கும் பொழுது தங்கள் தோல்வியைத் தலைமையிடத்துக்குச் சமிக்ஞை செய்துவிடுகின்றனர். மனித இனத்தை வேரோடு அழிக்க, ஒரு பெரும் வேற்றுக்கிரகவாசிப் படை பூமியை நோக்கி வருகிறது. அதிக சக்தி வாய்ந்த புவியீர்ப்பு இயந்திரம்தான் அவர்கள் ஆயுதம். ரேயாவில் அமைக்கப்பட்ட கண்காணிப்புச் சாவடியை, சனி கிரகத்தின் வளையங்களோடு சேர்ந்து உறிஞ்சுகிறது அப்புவியீர்ப்பு இய...
அம்மா கணக்கு விமர்சனம்

அம்மா கணக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சை என்ற முறையைக் கண்டுபிடித்தவரைக் கூட மாணவர்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், கணக்கைக் கண்டுபிடித்தவன் மீது மட்டும் ஏராளாமான மாணவர்கள் கடுங்கோபத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்; இருப்பார்கள். ’எவன்டா கணக்கைக் கண்டுபிடிச்சான்?’ என்ற வசனத்தை எரிச்சலான தொனியில் செவி மடுக்காத மாணவர்களோ, பெற்றோர்களோ அனேகமாக இருக்க மாட்டார்கள். ஏன் மகாகவியையே, ‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’ என விழி பிதுங்கச் செய்த பெருமை கணக்கிற்கு உண்டு. இப்படத்தில் வரும் அம்மாவிற்கும், மகளிற்கும் கூட அதே பிரச்சனைதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல், மகளின் கணக்குப் பிரச்சனையை அம்மா எப்படிக் கணக்கு போட்டே தீர்க்க முயல்கிறார் என்பதுதான் படத்தின் கரு. ஓட்டுநரின் மகன் ஓட்டுநராகவும், வேலைக்காரியின் மகன் வேலைக்காரியாகவும் தானே போகப் போகிறார்கள்; அதற்கு ஏன் அநாவசியமாகக் கஷ்டப்பட்டுப் படிக்கணும் என்கிறாள் பத்தாம் வகுப்பு மாணவி. மே...
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் - கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக பாவனைகள் அலாதியாக உள்ளது. படமும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. எதிர் வீட்டுப் பெண்ணான மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைஷாலியிடம் அவர் வழிவதெல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. காதலிக்கப்பட மட்டுமே என்றாலும், வைஷாலி அதிகமாக ஈர்க்கிறார். அத்தகைய ஈர்ப்புக்கு, அவர் லூசுப் பெண்ணாகச் சித்தரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அதை விடக் குறிப்பாக, எவ்விதப் ...
சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
நட்பைக் கொண்டாடும் நகைச்சுவைத் திரைப்படம். 20 வருடங்களுக்குப் பின், ஃபேஸ்புக் மூலமாக தன் நண்பனைச் சந்திக்கிறான் கால்வின் ஜாய்னர். அடுத்த நாள் காலை சி.ஐ.ஏ. கால்வின் வீட்டு வாசலில் நிற்கிறது. அவன் சந்தித்த நண்பனான பாபி ஸ்டோன் ஒரு கொலை செய்து விட்டு, செயற்கைக் கோள் சம்பந்தமான குறியீட்டு இலக்கங்களை தீவிரவாதிகளிடம் விற்கப் பார்க்கும் மோசமான நபர் என சி.ஐ.ஏ.வால் கால்வினுக்குச் சொல்லப்படுகிறது. பாபியோ மீண்டும் கால்வினை அணுகி உதவி கேட்கிறான். கால்வின் சி.ஐ.ஏ. பக்கமா? நண்பன் பக்கமா? என்பதே படத்தின் கதை. கதை ஓர் ஆக்ஷன் படத்துக்கான கருவைக் கொண்டிருந்தாலும், நகைச்சுவையையே பிரதானமாகக் கொண்டுள்ளது. ஸ்டேண்ட்-அப் காமெடியனான கெவின் ஹார்ட், கால்வின் கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தான் வாழும் வாழ்க்கை மீதுள்ள விரக்தியைக் காட்டுவதாகட்டும், நண்பனின் தொல்லை தாங்க முடியாமல் கழட்டி விடப் பார்ப்பதாக...
எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அதீத ஹீரோயிசத்தையும், மாஸ் ஹீரோக்களையும், அப்படிப்பட்டவைகளை வியந்தோதிய படங்களையும் பகடி செய்யும் ‘ஸ்பூஃப்’ படமாக ரசிக்க வைக்கிறது இப்படம். தலைப்பே, அத்தகைய பகடியின் ஒரு வடிவம் தான். ‘நைனா’ எனும் அதீத அதிகாரத்தை வழங்கும் நாற்காலியில், உட்காரத் தகுதியான நபரைத் தேடுகிறான் தாஸ். ரத்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் ஜானியை, கொலைகள் புரியும் பெரிய ‘மாஸ்’ வீரனென நினைத்து தெரியாத்தனமாக நைனாவாகத் தேர்வு செய்து விடுகிறான் தாஸ். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கலகலப்பான கதை. Cigarette smoking is injurious to health என நான் கடவுள் ராஜேந்திரன் குரலில் ஆங்கில உச்சரிப்பைக் கேட்ட நொடி முதல், திரையரங்கில் கேட்கும் பார்வையாளர்களின் சிரிப்பொலி, அனேகமாக முதல் பாதி முழுவதும் எதிரொலிக்கிறது. அதுவும் இடைவேளைக் காட்சியில், சரவணனுக்கு முன் ஜீ.வி.பிரகாஷ் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சி அதகளம். இப்படியொரு கலகலப்...
தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும். தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் கதை. பேய்ப் படம் என்பதை மீறி படம் சில இடங்களில் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நான் ரொம்ப சோர்ந்துட்டேன். என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என ஆவியால் பீடிக்கப்படும் 11 வயது பெண் நம்பிக்கையிழந்து சொல்கிறாள். எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் அவளது அக்கா மார்க்ரெட் கூட, “நீ தான் ...