32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரை விமர்சனம்

1261 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 83 / 85
செய்திகள் வரிசை (பக்கம் 83)
ராஜபாட்டை விமர்சனம் சினிமா

ராஜபாட்டை விமர்சனம்

  ராஜபாட்டை – அரசர் செல்வதற்கான அகன்ற பாதை அல்லது நேர்முறையான வழி. படத்திற்கும், தலைப்பிற்கும் எந்தளவு தொடர்பு இருக்கும் என சரியாக ஊகிக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் தன் வெளிநாட்டு ஜீப்பில் செல்லும் சாலைகளைக் குறிக்கலாம் அல்லது நாயகன் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்லும் சாலையைக் குறிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நேர்முறையான வழி என்ற பொருள் வருமாறு தலைப்பு வைக்கப்பட்டிருக்காது என்பது மட்டும் திண்ணம். அனல் முருகன் இரண்டாம் வரிசையில் நிற்கும் ஸ்டன்ட் […]

24/12/2011 admin
உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம் சினிமா

உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

உச்சிதனை முகர்ந்தால் – தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம். புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு.  சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் […]

20/12/2011 admin
மெளனகுரு விமர்சனம் சினிமா

மெளனகுரு விமர்சனம்

  மெளனகரு – ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம். பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் […]

17/12/2011 admin
மம்பட்டியான் விமர்சனம் சினிமா

மம்பட்டியான் விமர்சனம்

மம்பட்டியான் – 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட். சின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது […]

16/12/2011 admin
ஒஸ்தி விமர்சனம் சினிமா

ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி – மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் “ஓஸ்தி வேலன்” ஆக உள்ளது. நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் […]

09/12/2011 admin
போராளி விமர்சனம் சினிமா

போராளி விமர்சனம்

போராளி – தனக்குள் மிருகங்களைப் மறைத்தவாறு போலியான முகங்களோடு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அத்தகைய மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தானென்று படம் தொடங்குகிறது.  தந்தையின் இரண்டாம் மனைவி மற்றும் அவள் தம்பி் என உறவினர்கள் சேர்ந்து அதி புத்திசாலி பள்ளி மாணவனான குமரனைப் படிக்க அனுப்பாமலும், எவருடனும் பழக விடாமலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும், குமரனுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்கின்றனர். சொத்துக்கள் குமரன் […]

01/12/2011 admin
மயக்கம் என்ன விமர்சனம் சினிமா

மயக்கம் என்ன விமர்சனம்

மயக்கம் என்ன – கலக்கத்திலோ, குழப்பத்திலோ, உணர்வுநிலைத் தடுமாற்றத்திலோ உள்ளவரைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்கப்படும் அன்பாக  தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.வனவிலங்கு புகைப்படக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளவர் கார்த்திக் சுவாமிநாதன். கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான சுந்தர், யாமினி என்னும் பெண்ணை அவனது நட்பு வட்டத்திடம் தன் தோழியாக அறிமுகப்படுத்துகிறான். யாமினிக்கு கார்த்திக்கைப் பிடிக்கத் தொடங்குகிறது. நண்பனின் தோழி என கார்த்திக் விலகப் பார்த்தாலும் இயற்கையின் வேதியியலில் இருந்து தப்ப இயலாமல் யாமினியிடம் காதல் வயப்படுகிறான். சுந்தருக்கு […]

29/11/2011 admin
பாலை விமர்சனம் சினிமா

பாலை விமர்சனம்

பாலை – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் என்று பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கினாராம் இப்படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.முல்லை நிலப்பகுதியான ஆயக்குடி (ஆயர்க்குடி) -யில் வாழும் தமிழர்களை வடக்கில் இருந்து வரும் தமிழறியா வந்தேறிகள் பாலை நிலப்பகுதிக்கு துரத்தி விட்டு விடுகின்றனர். முல்லைக்கொடி என தற்காலிக தங்குமிடத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு வாழுகின்றனர் தமிழர்கள். பாலை […]

28/11/2011 admin
தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம் சினிமா

தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் – உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறது படத்தின் சுவரொட்டி. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் சதவிகிதம் அதிகம்; அதே போல் குற்ற எண்ணிக்கைகளின் அளவும் அதிகம்’ என ஓர் ஆய்வு குறிப்பிடுவதாக சொல்லும் இயக்குனர் வி.சி.வடிவுடையானின் சொந்த மாவட்டமும் அஃதே. எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு ‘வெட்டோத்தி இல்ல’த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் […]

16/11/2011 admin
ஏழாம் அறிவு விமர்சனம் சினிமா

ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு– ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான […]

04/11/2011 admin
வேலாயுதம் விமர்சனம் சினிமா

வேலாயுதம் விமர்சனம்

வேலாயுதம் – நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி.  குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள். பவுனூர் என்னும் கிராமத்தில் […]

30/10/2011 admin
சதுரங்கம் விமர்சனம் சினிமா

சதுரங்கம் விமர்சனம்

  சதுரங்கம் – அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம். ‘திசைகள்’ என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம். துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. […]

08/10/2011 admin
மங்காத்தா விமர்சனம் சினிமா

மங்காத்தா விமர்சனம்

மங்காத்தா – வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா. தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் […]

07/09/2011 admin
தெய்வத்திருமகள் விமர்சனம் சினிமா

தெய்வத்திருமகள் விமர்சனம்

தெய்வத்திருமகள் – பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. “ஐ ஆம் சாம்” என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர். ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி […]

30/07/2011 admin
காஞ்சனா விமர்சனம் சினிமா

காஞ்சனா விமர்சனம்

  காஞ்சனா – முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான ‘முனி’க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் […]

27/07/2011 admin