32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 10 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 10)
ஹிட் 3 – புதிய லுக்கில் நானி அயல் சினிமா

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 ஆவது படமாக ‘ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)’ எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா […]

15/09/2024 Dinesh R
“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண் இது புதிது

“லப்பர் பந்து: ஆக்ரோஷ கிராமத்து இளைஞனாக நான்” – ஹரிஷ் கல்யாண்

பார்க்கிங் படத்தைப் போல் ஒரு அசத்தலான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை ஹரிஷ் கல்யாண் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தமிழரசன் பச்சமுத்து இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் லப்பர் பந்து படத்தைத் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாக அ. வெங்கடேஷ் இணைந்துள்ளார். இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க கதாநாயகிகளாக ‘வதந்தி’ சீரிஸ் புகழ் சஞ்சனா, சுவாசிகா விஜய் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் காளி வெங்கட், […]

09/09/2024 Dinesh R
GOAT – தேவரா | ஹம்சினி என்டர்டெயின்மென்ட் சினிமா

GOAT – தேவரா | ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியீட்டிற்கு முன்னதாக அட்வான்ஸ் புக்கிங் உட்பட பல சாதனைகளைப் படைத்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட திரைப்படங்கள் அனைத்தையும் […]

03/09/2024 Dinesh R
BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா அயல் சினிமா

BRB | எதிர்காலத்தில் நடக்கும் பில்லா ரங்கா பாட்ஷா

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப் பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ராந்த் ரோணா படத்திற்குப் பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை பிளாக்பஸ்டர் ஹனுமான் படத் தயாரிப்பாளர்களான கே. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு […]

02/09/2024 Dinesh R
மனோரதங்கள் – சிக்கலான அக சுற்றுலா OTT

மனோரதங்கள் – சிக்கலான அக சுற்றுலா

இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்தப் படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதையம்சம் கொண்டது. 1. ‘மனோரதங்கள்’ திரைப்படம், இலக்கிய உலகின் பிதாமகனான எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும்வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாபெரும் எழுத்தாளருக்கான இதயப்பூர்வமான அஞ்சலியாக இந்தப் […]

01/09/2024 Dinesh R
சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன் இது புதிது

சிலம்பப் பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

உடற்தகுதியை நேர்த்தியாகப் பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும், தற்காப்புக் கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்பு கலைக்கான (மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இப்பயிற்சி இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருப்பதையும் காண முடிகிறது. சமீபத்தில் நடிகை சுருதிஹாசன் […]

01/09/2024 Dinesh R
தங்கலான் | 100 கோடி வசூல் கிளப்பில் சினிமா

தங்கலான் | 100 கோடி வசூல் கிளப்பில்

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து புதிய சாதனையைப் படைத்து வருகிறது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் […]

30/08/2024 Dinesh R
போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம் இது புதிது

போகுமிடம் வெகுதூரமில்லை – திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாட்டம்

ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லரி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜாவின் இயக்கத்தில் விமல், நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் போகுமிடம் வெகு தூரமில்லை ஆகும். இப்படத்தில் விமலுடன் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்கில் ஓடிக்வ்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர். பதற வைக்கும் இடைவேளை காட்சியும், பரபர என்று செல்லும் திரைக்கதையும் ரசிகர்களைக் […]

28/08/2024 Dinesh R
பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன் சினிமா

பேட்ட ராப் – பிரபுதேவா | வேதிகா | சன்னி லியோன்

நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்தின் தமிழகத் திரையரங்க வெளியீட்டு உரிமையை சஃபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இயக்குநர் எஸ்.ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் […]

24/08/2024 Dinesh R
2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம் சினிமா

2K லவ் ஸ்டோரி – சுசீந்திரனின் ரொமான்ஸ் திரைப்படம்

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான, ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். தமிழ்த் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் சுசீந்திரன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வைப் […]

24/08/2024 Dinesh R
மலை | சுரண்டலுக்கு எதிரான இயற்கையின் பதில் சினிமா

மலை | சுரண்டலுக்கு எதிரான இயற்கையின் பதில்

ப்ளூ ஸ்டார் வெற்றியைத் தொடர்ந்து லெமன் லீஃப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படமான மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இப்படத்தை லெமன் லீஃப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தியும், சவுந்தர்யா கணேஷ்மூர்த்தியும் தயாரித்துள்ளனர். யோகிபாபு, லக்‌ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது. மனிதர்களைப் போல விலங்குகளும் தாவரங்களும் மலைகளும் ஆறுகளும் நீர்நிலைகளும், இந்த பூமியில் அதிமுக்கியமானதாக […]

23/08/2024 Dinesh R
வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம் அயல் சினிமா

வீர சந்திரஹாசா | இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இயக்கம்

கேஜிஎஃப், சலார் போன்ற பிரம்மாண்டமான வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராகக் களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்தத் திரைப்படம் அவரது கலையுலகப் பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும். இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்குப் பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர […]

23/08/2024 Dinesh R
தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி இது புதிது

தங்கலான் – ஆள்வதற்கான உரிமையை நோக்கி

(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.) //தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. // படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் […]

22/08/2024 Dinesh R
கருடன் சூரி – விலங்கு இயக்குநர் சினிமா

கருடன் சூரி – விலங்கு இயக்குநர்

கதையின் நாயகனாக உயர்ந்து, வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கருடன் படத்தைத் தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கி அனைவரது கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் […]

22/08/2024 Dinesh R
ஏலியன்: ரோமுலஸ் | உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது வசூல் அயல் சினிமா

ஏலியன்: ரோமுலஸ் | உலகளவில் $ 110 மில்லியனைத் தாண்டியது வசூல்

ரிட்லி ஸ்காட்டின் உருவாக்கமான ஏலியன் பல தசாப்தங்களாகப் பயமுறுத்திப் பார்வையாளர்களைப் கவர்ந்திழுத்து வருகிறது. ஏலியன்: ரோமுலஸ், 20th செஞ்சுரி ஸ்டுடியோவின் சமீபத்திய படமாகும். இந்த அறிவியல்புனைவு திகில் தொடர் மீண்டுமொரு முறை தனது சக்தியை நிரூபித்துள்ளது. இப்படம் வெளியாவ வாரத்தின் இறுதியில் ஒரு குறிப்பிடத்தக்க பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதன் தொடக்க வார இறுதியில், ஏலியன்: ரோமுலஸ் உள்நாட்டில் $41.5 மில்லியன் வசூல் செய்து, ஏலியன் படத்தொடரில் இரண்டாவது அதிக வசூலான படமெனும் அந்தஸ்தை அடைந்துள்ளது. […]

21/08/2024 Dinesh R