32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜனவரி 2025 இல் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’

Dinesh R சேலம் Published: 09/12/2024 1 நிமிட வாசிப்பு Teaser
எழுத்து அளவு:

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான S.U. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஜி.கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் என்டர்டெய்னராகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கெனவே வெளியாகிப் பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது.

திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.