Shadow

ஹிட் 3 – புதிய லுக்கில் நானி

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால்போஸ்டர் சினிமா + யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும் ‘ஹிட் : மூன்றாவது வழக்கு’ ( HIT : 3rd Case) எனும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி தனது 32 ஆவது படமாக ‘ஹிட்: மூன்றாவது வழக்கு ( HIT : 3rd Case)’ எனும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். யுனானிமஸ் புரொடக்ஷன் எனும் நிறுவனத்துடன் இணைந்து வால்போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் ஒரு க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்தத் திரைப்படத்தில் அபாயகரமான ஹிட் அதிகாரியாக நடிக்கும் நானியின் கதாபாத்திரம் பற்றிய ஒரு ப்ரோமோ அசைவொளி வெளியாகியிருந்தது. தற்போது அப்படத்தின் படப்படிப்பு தைதராபாதில் தொடங்கியுள்ளது. அதில் நானி கலந்து கொண்டார்.

ஹிட் 2 படத்தின் இறுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளபடி ஹிட் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் நானி நடிப்பார். மேலும், ‘ஹன்டர்ஸ் கமாண்ட் ஆஃப் ஹிட் தேர்ட் கேஸ் (Hunter’s Command of HIT: 3rd Case’ எனும் இந்தப் படத்திற்காகப் புதிய வடிவிலான உடல் தோற்றத்திற்கு மாற்றம் பெற்றுள்ளார் நானி. சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஸ்ரீ நாகேந்திர தாங்கலா பணியாற்றுகிறார். ஹிட் – 3 அடுத்த ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து & இயக்கம் – டாக்டர் சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர் – பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் – வால்போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ்
இசை – மிக்கி ஜே .மேயர்
படத்தொகுப்பு – கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பு – ஸ்ரீ நாகேந்திர தாங்கலா
நிர்வாக தயாரிப்பாளர் – எஸ் வெங்கடரத்தினம் (வெங்கட்)
ஒலி கலவை – ஜி . சுரேன்
லைன் புரொடியுசர் – அபிலாஷ் மந்தாதுபு
தலைமை இணை இயக்குநர் – வெங்கட் மட்டிராலா
ஆடை வடிவமைப்பாளர் – நானி கமருசு
எஸ் எஃப் எக்ஸ் – சிங் சினிமா
வி எஃப் எக்ஸ் மேற்பார்வை – வி எஃப் எக்ஸ் டி டி எம் ( VFX DTM)
டிஐ – B2h ஸ்டூடியோஸ்
வண்ணக் கலவை – எஸ். ரகுநாத் வர்மா
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ