32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1082 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 71 / 73
செய்திகள் வரிசை (பக்கம் 71)
தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ் சினிமா

தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

‘இங்க என்ன சொல்லுது‘ படத்தின் இசை  டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதுவரை வெளிவராத கதை களத்தின்  பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.   எஸ்.டி.ஆர். (STR)  இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித […]

04/12/2013 admin
“கள்ளப்படம்” தொடங்கியது சினிமா

“கள்ளப்படம்” தொடங்கியது

இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகி வருகிறது “கள்ளப்படம்”. பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெ.வடிவேல் இப்படத்தின் இயக்குநராய் களம் இறங்குகிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய் இருந்த ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, காகின் படத்தொகுப்பில், கே இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த 21 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிப்வாளர் பி.சி.ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தனர்.  தன்னுடைய இணை இயக்குநரை ஆசிர்வதிக்கும் […]

02/12/2013 admin
நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத் சினிமா

நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்த மகிழ்ச்சியும், முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது.  குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும், அவரது தொழில்நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள். “அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு […]

01/12/2013 admin
ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’ சினிமா

ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

சில கூட்டணிகள் அறிவிப்பின் போதே வெற்றி நிச்சயம் என்ற கட்டியத்துடன் அறிவிக்கப்படும் .அதைப் போல ஆர்யாவுடன்  இயக்குநர் ராஜேஷ் அமைத்த வெற்றிக் கூட்டணி  ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தைத் தொடர்ந்து  இப்போது மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க விழைகிறது. தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான ‘The Show People‘ நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்தில் சந்தானமும் இணைவது […]

27/11/2013 admin
மனதில் மாயம் செய்தாய் சினிமா

மனதில் மாயம் செய்தாய்

தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் “மனதில் மாயம் செய்தாய் (M M S)”. ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், […]

13/11/2013 admin
தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா சினிமா

தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து,  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக்  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்ஷரா..  அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார். ‘நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்தத் […]

12/11/2013 admin
பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன் சினிமா

பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன்

ஹிந்தியில் முதன்முறையாக,  “கன்ஸ் ஆஃப் பெனாரஸ் (Guns of Benares)” என்னும் படத்தில் அறிமுகமாகிறார் கணேஷ் வெங்கட்ராம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படம் தான் ஹிந்தியில், ‘கன்ஸ் ஆஃப் பெனாரஸ்’ என மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி நடித்த பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார். “இயக்குநர் சேகர் சூரி எனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கும் முழுவதும் பிடித்து விட்டது. இதற்கு முன் கேங்ஸ்டராக நடித்ததில்லை.  முழுப் படமும் பெனாரசில் தான் எடுக்கப்படவுள்ளது. […]

12/11/2013 admin
ஜெய் “ஆந்திரா மெஸ்” சினிமா

ஜெய் “ஆந்திரா மெஸ்”

தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும். ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டியுள்ள படங்கள் உடனே பிரபலமாகாவது  வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.  ‘ஷோ போட் (Show boat)’  ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்  படத்தின் தலைப்பு ‘ஆந்திரா மெஸ்‘.  சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது […]

07/11/2013 admin
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண் சினிமா

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் ‘திருடன் போலீஸ்‘. திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது […]

07/11/2013 admin
இல்ல ஆனாலும் இருக்கு சினிமா

இல்ல ஆனாலும் இருக்கு

மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம்,  விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம்  ஆகிய படங்களை  தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் ‘யான்’ படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  ‘இல்ல ஆனாலும் […]

06/11/2013 admin
உலகநாயகனைச் சந்தித்த அட்லி சினிமா

உலகநாயகனைச் சந்தித்த அட்லி

இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி‘ திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே  நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த  இளம்  இயக்குநர் அவர் மீது  உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி. ‘ராஜா […]

19/10/2013 admin
வருகிறது கொரியன் ‘கொரில்லா’ சினிமா

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்பால் விளையாடும் லிங் லிங் […]

14/10/2013 admin
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின் சினிமா

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின்  போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.                 “தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,                 இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,                 கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,           […]

03/10/2013 admin
முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி! சினிமா

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  ‘ராஜா ராணி‘. அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த ‘ராஜா ராணி’ முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து […]

01/10/2013 admin
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி சினிமா

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

‘விண்ணைத் தாண்டி வருவாயா‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் […]

14/09/2013 admin