
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து
கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் 'பவர்' அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.நவம்பர் 5 ஜனாதி...





