
தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி, அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார்.
எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எது வந்தாலும் அவற்றைப் புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரிக் காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது.
தொகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவெ...