
சுயம்வரம் – 2
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்."வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??" என்று கேட்டார்.அசடு வழிந்துகொண்டே,
"அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான்.
"அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,"டேய்.. ராஜேஷ் என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக."அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்...
"அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதி...