Shadow

“சமூக மாற்றத்திற்கு சினிமா அந்தளவு முக்கியம்” – நடிகர் மணிகண்டன்

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், “’தலைக்கூத்தல்’ படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் படத்தின் முதல் பாடல் மற்றும் அனைத்துப் பாடல்களையும் ஆண்களே பாடுகின்றனர். இந்தப் படத்தில் பெண் பாடல் வேண்டும் என்பதற்காக சிறப்பாகவும் படத்திற்கு ஏற்ற மாதிரியும் பாடல் கட்சி அமைந்துள்ளது” என்றார்.

நடிகர் மணிகண்டன், “நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால் படம் குறித்துப் பேசாம, படத்துல சம்பந்தப்பட்ட நண்பர்களைப் பத்திப் பேசுறேன். முதலில் ஜேபி சார் (இயக்குநர் ஜெயபிரகாஷ்) பத்திப் பேசணும். 2014 – 15 இல ஃபெஸ்டிவல்ஸ்க்காக ஒரு படத்தை டைரக்ட் பண்ணியிருந்தேன். அந்தப் படம், பெங்களூர் ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ஸ்க்ரீன் ஆகியிருந்துச்சு. அந்த சமயத்துல அவரோட படம் லென்ஸும் ஸ்க்ரீன் ஆச்சு. சாருக்கு ஃபெஸ்டிவல் சினிமா மேல இருக்கிற மோகமும், அதே சமயம் ஃபெஸ்டிவல் சினிமாவுக்கும், கமர்ஷியல் சினிமாவுக்கும் நடுவுல இவ்ளோ பெரிய இடைவெளி இருக்கு, இதுல ப்ளெண்ட் இல்லங்கிறதுக்கான அதீத கோபமும் இருக்கு. அவர் கமர்ஷியல் கன்ஸ்ட்ரெயின்ட்ஸ்க்கு அடங்காத ஒரு மனுஷன் என்பதற்கு அவரோட ஃப்லிமோகிராஃபி பெரிய ஃப்ரூஃப்பா இருக்கும். அவரிடம் பத்து நிமிஷம் பேசினீங்கன்னா, அவர் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கும் சப்ஜெக்ட்ஸில் அதீத கொள்கைப்பிடிப்போட இருக்கிறது தெரியும். ‘இங்க நான் வேறொரு நோக்கத்திற்காக வந்திருக்கேன்’ என்பவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நம்ம கடமை. இப்படியான ஒரு படைப்பாளியைக் கண்டெடுக்கிறது ரொம்ப ரேர். இரண்டாவது செங்கேணியைப் பத்திச் சொல்லணும். ஜெய்பீம் படத்திற்கு, என்னைத்தான் ஞானவேல் சார் டப்பிங் பார்த்துக்கச் சொன்னார். கிட்டத்தட்ட அந்தப் படத்தை 5 தடவை டப் பண்ணோம். ஃபர்ஸ்ட் டைம் டப்பிங் முடிஞ்சதும், அவங்களை ஊருக்குப் போகலாம் எனச் சொல்லிடுவேன். இரண்டு நாள் கழிச்சு, ‘லிஜோ ஃப்ரீயா இருக்கீங்களா? ஒன்னுமில்ல, இரண்டே இரண்டு டயலாக் கரெக்ஷன் இருக்கு. வரமுடியுமா?’ எனக் கேட்டா, எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் இரண்டாம் முறை வருவாங்க. ‘அந்த இரண்டு டயலாக முடிஞ்சிடுச்சு இல்ல?’ எனக் கேட்பாங்க. ‘இல்ல. திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து’ன்னு சொல்வேன். டேலன்ட் ஒரு பக்கம் இருந்தாலும், அவங்களோட கமிட்மென்ட்டைப் பார்த்து, ‘சாக்குபோக்கு சொல்லாமல் இந்த மாதிரி வொர்க் பண்ணி எடுத்த வேலையை முடிக்கணும்’ என இன்ஸ்பையர் ஆனேன். நான் திரையில் பார்த்த வியந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் இந்தப் படத்துல இருக்காங்க. ட்ரெய்லர் பார்க்க அவ்ளோ பிராமிஸிங்கா இருக்கு. நாம் இன்னும் நல்ல நாகரீகமடைந்த சிவிலைஸ்ட் சொசைட்டியா மாறிட்டிருக்கோங்கிறதுக்கு, களச் செயற்பாட்டளர்கள் எவ்ளோ முக்கியமோ, சினிமாவும் அந்தளவுக்கு முக்கியம். அதுல, ‘காதல் என்பது பொதுவுடைமை’ என்ற படமும் ஒரு மிகப் பெரிய பங்கா இருக்கும். பதிவா இருக்கும்” என்று ‘காதல் என்பது பொதுவுடைமை’ படம் வெற்றி பெற வாழ்த்தினார்.