
“சமூக மாற்றத்திற்கு சினிமா அந்தளவு முக்கியம்” – நடிகர் மணிகண்டன்
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், “'தலைக்கூத்தல்' படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் படத்தின் முதல் பாடல் மற்றும் அனைத்துப் பாடல்களையும் ஆண்களே பாடுகின்றனர். இந்தப் படத்தில் பெண் பாடல் வேண்டும் என்பதற்காக சிறப்பாகவும் படத்திற்கு ஏற்ற மாதிரியும் பாடல் கட்சி அமைந்துள்ளது” என்றார்.நடிகர் மணிகண்டன், "நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால் படம் குறித்துப் பேசாம, ...