32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தனம் | 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து

Dinesh R சேலம் Published: 24/02/2025 2 நிமிட வாசிப்பு Updated: 27/02/2025 Others
எழுத்து அளவு:

விஜய் டிவியில், வெளிவரவுள்ள நெடுந்தொடர் “தனம்” ஆகும். ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த சீரியலை விளம்பரப்படுத்தும் விதமாக, 50 பெண் ஓட்டுநர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டி விருந்தளித்துள்ளனர் படக்குழுவினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாராவிதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள். மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது.

தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க, ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, Vj கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல், சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பிப்ரவரி 17 முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்தப் புதிய சீரியல், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ நாயகிகளைக் கௌரவப்படுத்தும் விதமாக, ‘தனம்’ சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்துக் கொண்டாடினர்.

இந்நிகழ்வினில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் நெடுந்தொடரின் குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான கொண்டாட்டமாக அமைந்தது. இந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

“தனம்” சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் காணக்கிடைக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.