32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டோபமைன் @ 2.22 | சமகால பிரச்சனைகளின் எதிரொலி

Dinesh R சேலம் Published: 17/08/2024 2 நிமிட வாசிப்பு Updated: 19/08/2024 சினிமா
எழுத்து அளவு:

‘டோபமைன் @ 2.22′ எனும் படத்தை, திரவ் இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படம் பற்றி இயக்குநரும் நடிகருமான திரவ், “ ’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்கள் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.

மேலும், “விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- சீசன் 3’ -இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், யூடியூப் தொடரான, ‘ஷாலினி ஸ்டோர்’ மூலம் நன்கு அறியப்பட்டவர். அவரும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘குற்றம் கடிதல்’ புகழ் சத்யா நடித்துள்ளார். விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் ’நூடுல்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்” என்றார்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் திறமையால் படத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, க்ளைமேக்ஸில் இடம்பெறும் பாடல் அனைவரையும் பிரதிபலிக்கும் மற்றும் தொடர்புபடுத்தும் வகையில் கபில் கபிலன் அதைப் பாடியுள்ளார். படத்தில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல் ஒன்றை ’கைதி’, ‘லியோ’ புகழ் சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார்.

ஆலன் ஷோஜி படத்திற்கு இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார். ஆனந்த் ராமச்சந்திரன், கிஷோர் காமராஜ் ஆகியோர் ஒலிப்பதிவிலும், பப்ளிசிட்டி டிசைனில் தினேஷூம் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திராவும், அப்துல் நாசரும் இந்தப் படத்திற்கான மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கின்றனர்.

முன்னதாக வெப்பம் குளிர் மழை படத்தைத் தயாரித்த ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படம், நாம் அடிக்கடி சந்திக்கும் மக்கள், வாழ்க்கை முறை மற்றும் சமகால பிரச்சனைகளை எதிரொலிக்கும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.