32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

என்னோடு விளையாடு – குதிரைப் பந்தயமும் சூதாட்டமும்

Dinesh R சேலம் Published: 14/02/2017 2 நிமிட வாசிப்பு Updated: 09/03/2020 சினிமா
எழுத்து அளவு:

Ennodu Vilaiyaadu

ரொமான்டிக் த்ரில்லர் வகைமையைச் சேர்ந்த ‘என்னோடு விளையாடு’ திரைப்படம், கெளதம் வாசுதேவ் மேனன் பாணியில் ‘ஸ்டலிஷான லவ்’ படமாக வந்துள்ளது எனச் சிலாகித்தார் படத்தின் எடிட்டர் கோபிகிருஷ்ணா. இவர், ‘வழக்கு எண்:18/9’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்துள்ளார். இரண்டு லவ் ட்ராக், ஒரு சேஸிங் (chasing) ட்ராக் கொண்ட இப்படம், ‘தனி ஒருவன்’ போல் சுவாரசியமாக உள்ளதென நம்பிக்கையோடு தெரிவித்தார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தில், பரத் – கதிர் என படத்தில் இரண்டு கதாநாயகன்கள். பரத்திற்கு ஜோடியாக சாந்தினி தமிழரசனும், கதிருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடித்துள்ளனர். காதல் பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் மோசஸும், சேஸிங் போன்ற மற்ற ஜானர் பாடல்களை ‘பர்மா’ படத்தின் இசையமைப்பாளர் சுதர்ஷன் M.குமாரும் மெட்டமைத்துள்ளனர்.

‘ஒரு சின்ன பிரேக் இருந்தால் நல்லாயிருக்கும்’ என ஒன்பது மாதங்கள் இடைவெளி விட்ட பின், மிக வித்தியாசமான ஜானரில் கதை சொன்ன அறிமுக இயக்குநர் அருண் கிருஷ்ணசுவாமி படத்திற்கு ஓகே சொல்லியுள்ளார் பரத். படம் மிக நன்றாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் உள்ளார் பரத். ‘கதையைச் சொன்னதை விட மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார்’ என கதிர் இயக்குநரைப் பாராட்டினார்.

விலங்குகளைப் படத்தில் காட்டவே ஏக தடைகளுள்ள சூழலில், மைசூரில் நடக்கும் குதிரைப் பந்தயத்தை ‘லைவ் ரெக்கார்ட்’ செய்து படத்தில் உபயோகித்துக் கொள்ள முறையான பெர்மிஷன் வாங்கியுள்ளார் இயக்குநர் அருண்.

விறுவிறுப்பானதொரு படத்தை, ஃபிப்ரவரி 17 ஆம் தேதியன்று எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.