Shadow

வில்லனாகிறார் வின் டீசல்

Fast and Furious 8

பால் வாக்கருக்கு விடையளித்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7, பெரும் வசூலை ஈட்டிய வெற்றிப்படமாக அமைந்தது.

அத்தொடரின் எட்டாவது பாகத்தில், நாயகர்களில் ஒருவரான வின் டீசல் வில்லனாகிறார்.

ஒரு மனிதனுக்கு குடும்பம் மிக அவசியம் எனக் கொள்கையுடைய டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் வருபவர் வின் டீசல். கார் சேஸ்களைத் தவிர்த்து, எல்லாப் பாகத்திலும் குடும்பத்தை ஒருங்கிணைப்பதிலே கவனம் செலுத்துவார். அவரைக் குடும்பத்தில் இருந்து பிரித்து சார்லிஸ் தெரான், குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார். எப்படி அவரது குடும்பம் அதிலிருந்து மீட்கிறது என்பதுதான் படத்தின் கதை.

Fast and Furious 8

வ்ரெஸ்ட்லிங் புகழ் ராக், ஜேஸன் ஸ்டாத்தம், மிஷால் ரோட்ரிகஸ் ஆகியோர்கள் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள். போன பாகத்தில் எலியும் பூனையுமாக இருந்த ராக்கும், ஜேஸன் ஸ்டாத்தமும், இப்பாகத்தில் வின் டீசலை வீழ்த்த இணைகின்றனர். கியூபாவின் கரையோரங்களிலும், நியூ யார்க் தெருக்களிலும், பேரன்ட்ஸ் கடலின் பனிவெளிகளிலும் வின் டீசலைத் துரத்துகிறது அவர் உருவாக்கிய அணி.

இப்படத்தை, ஏப்ரல் 14 அன்று தமிழிலும் ஹன்சா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.