32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

Dinesh R சேலம் Published: 29/03/2024 3 நிமிட வாசிப்பு Updated: 31/03/2024 மருத்துவம்
எழுத்து அளவு:

ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மருத்துவர் முத்துக்குமார் P, மருத்துவர் கார்த்திகேயன் B, மருத்துவர் ராஜா R, மருத்துவர் பிரதீப்குமார் K, மற்றும் மருத்துவர் முத்து வீரமணி உள்ளிட்ட புகழ்பெற்ற மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும், நிபுணர்களும் கொண்ட குழு, இந்தச் செயல்முறையைச் செய்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி நன்றாகக் குணமடைந்தார் மற்றும் அவரது சிறுநீரக செயல்பாடு திறம்பட மீட்டெடுக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு, அவர் தன் அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாகச் செய்யும் வலிமையைப் பெற்றிருக்கிறார். இனி அவருக்கு டயாலிசிஸ் தேவையில்லை.

மூத்த ஆலோசகரும், சிறுநீரக மருத்துவரும், மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் முத்துக்குமார் P, “இங்கு செய்யப்பட்ட எங்கள் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையின் முடிவைக் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இறந்த நன்கொடையாளரின் குடும்பத்தின் பெருந்தன்மைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். தானம் செய்யப்பட்ட சிறுநீரகத்திற்கு நன்றி, அதனால் ஒரு நபருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. மருத்துவர்கள் குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்களின் ஆதரவை நான் பாராட்ட விரும்புகிறேன். நோயாளி நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

“இது எங்களின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. இறந்த நன்கொடையாளரின் சிறுநீரத்தை நோயாளிக்கு மாற்றும் சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சையை, மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதிகளாலும், சிறந்த மருத்துவர்களின் குழுப்பணியாலும், திறம்பட சிக்கல்கள் இல்லாமல் செய்ய முடிந்தது” என்றார் சிறுநீரகவியலின் மூத்த ஆலோசகரான மருத்துவர் ராஜா R.

ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உள்ள ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிட்னி சயின்சஸ்’, அதிக சவால் மிக்க மாற்று அறுவைச் சிகிச்சை, குழந்தைகளுக்கான மாற்று அறுவைச் சிகிச்சை, ABO-இணக்கமற்ற சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் கீஹோல்/லேப்ராஸ்கோபிக் டோனர் நெஃப்ரெக்டோமி செயல்முறைகளைச் செய்வதற்கான நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்துடன் நன்கு பொருத்தப்பட்டுள்ளது.

தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த நிலையில், காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில், அதிசிறந்த மருத்துவ பராமரிப்பையும் நம்பிக்கையையும் வழங்குவதற்கான தனது பணியைத் தொடர்கிறது.

இது நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை ஆரோக்கியம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல், மற்றும் பிற சிறப்பு மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சை முறைகளை வழங்கும் ஒரு முன்னணி மருத்துவமனையாகும். அனுபவமிக்க மருத்துவர்கள், 50+ தீவிர சிகிச்சை படுக்கைகள், 20+ பச்சிளம் குழந்தைகளுக்கான படுக்கைகள், 7+ அறுவை சிகிச்சை அறைகள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நியூரோ மைக்ரோஸ்கோப் போன்ற கருவிகள் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ வசதிகளுடன், அவசர சிகிச்சை மற்றும் 24/7 டயாலிசிஸ் வசதிகள் கொண்ட மருத்துவமனை ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்குகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.