32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்

Dinesh R சேலம் Published: 14/11/2019 2 நிமிட வாசிப்பு Updated: 13/02/2020 அயல் சினிமா
எழுத்து அளவு:

Frozen-2-tamil-press-meet

ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழகப் பிரபலங்கள் இணைகிறார்கள். நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான எல்சா பாத்திரத்திற்கு தமிழில் பின்னணி குரல் தந்துள்ளார். ஒரு பாடலையும் பாடியுள்ளார். தமிழின் பிரபல பாடலாசிரியாக விளங்கும் தளபதி விஜயின் சர்கார், பிகில் படங்களுக்கு பாடல் தந்த பாடலாசிரியர் விவேக் இப்படத்திற்குத் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். படத்தின் மிகப்பிரபல கதாபாத்திரமான ஓலஃப் பாத்திரத்திற்கு காமெடியில் கலக்கும் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார். குணச்சித்திர நடிப்பில் கலக்கும் திவ்யதர்ஷிணி (விஜய் டிவி புகழ் டிடி) படத்தில் எல்சாவின் தங்கை அன்னாவிற்கு குரல் தந்திருக்கிறார்.

டிஸ்னியின் ஃப்ரோசன் 2 படத்திற்கு டப்பிங் கொடுத்த அனுபவம் பற்றிப் பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன், “இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். பல விதத்திலும், எல்சா எனும் பாத்திரத்தை நான் எனக்கு ரொம்ப நெருக்கமாகப் பார்க்கிறேன். அக்ஷ்ராவைத் தங்கையாகப் பெற்ற அதிர்ஷ்டசாலி நான். சிஸ்டர்ஹூட்டை சின்ன வயதிலிருந்தே நெருக்கமா அனுபவிச்சிருக்கேன். எல்சாக்கும் அன்னாக்குமான அந்தப் பாசத்தைப் புரிந்துகொண்டு டப்பிங் பேசியது சுலபமாக இருந்தது. சின்ன வயதில் இருந்தே, டப்பிங் பேசிப் பழகியதால் ஒரே நாளில் இந்தப் படத்திற்கு டப்பிங் முடித்தேன். ஸ்கூல் முடிச்சதும், அப்பாவுடன் போய், அவர் படத்தில் வரும் குழந்தை பாத்திரங்களுக்கு நான் தான் டப்பிங் தருவேன். அதனால் இப்படத்திற்கு ஒருநாளில் டப்பிங் பேசி முடிக்க முடிந்தது” என்றார்.

“நான் சிறுவனாக இருப்பது முதல் டிஸ்னி படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கேன். அந்தக் கம்பெனியில், ஒரு படத்துக்கு நான் டப்பிங் தர்றது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம். என் குரலை டெஸ்ட் செய்து, ஒலஃப் பாத்திரத்திற்கு அது பொருந்தும் என எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க” என கரைபுரண்டோடும் மகிழ்ச்சியில் உள்ளார் சத்யன்.

முதல் பாகத்தை விட மிரட்டும் விஷுவல்களும், வியக்கும் திரைக்கதையும், ஃபேண்டஸி உலகை கண்முன் கொண்டு வரும் பற்பல விசயங்கள் நிறைந்திருக்கும் ஃப்ரோசன் 2 (Frozen 2) ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பது உறுதி. உலகம் முழுக்க நவம்பர் 22 இல் வெளியாகும் இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.