32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹிப் ஹாப் ஆதி | கோவை இசைக்கச்சேரி | செப்டம்பர் 8

Dinesh R சேலம் Published: 24/08/2024 2 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகானாகக் ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் (Return Of The Dragon)” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. டார்க் என்டர்டெயின்மென்ட், ராஜ் மெலடிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மிகப் பிரம்மாண்டமான முறையில், கோயம்புத்தூரின் மிகப்பெரிய கொடிசியா மைதானத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழக சுயாதீன இசைத்துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ்த் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகானாக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்” எனும் பெயரில் லண்டன், மலேஷியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இசைக்கச்சேரியை நடத்தவுள்ளார். இக்கச்சேரியில் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசைக்கச்சேரி, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. இந்த இசைக்கச்சேரியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற கச்சேரியில் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.