குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி.எஸ்.முருகன் தயாரித்து வரும் படம் “இதுதான் காதலா”. இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுக கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.
இது விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் இதில் விஞ்ஞான மனிதனாக இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜசிம்மன் நடித்திருக்கிறார். காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதையும் வலியுறுத்திக் காதலையும் கணினியும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து “இதுதான் காதலா” படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
இதில் கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா இரண்டாவது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குநர் ராஜசிம்மன், காதல் சுகுமார், கூல் சுரேஷ், பாலு ஆனந்த், பயில்வான் ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
>> தயாரிப்பு – வி.எஸ்.முருகன்
>> ஒளிப்பதிவு – கணேஷ்ராஜா
>> இசை – தேசிய விருது பெற்ற சங்கர்
>> கலை – ராஜரத்தினம்
>> பாடல் – கவிஞர் வானம், யாமினி, குணசேகரன், மெளலன், ராஜசிம்மா
>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜசிம்மன்