32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு

Dinesh R சேலம் Published: 28/11/2018 1 நிமிட வாசிப்பு Updated: 05/02/2019 சினிமா
எழுத்து அளவு:

At-french-port

“நம் இந்திய திருநாடு சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் நிறைந்த நாடாக உள்ளது. இவர்கள் அரிய கலைகள், சித்துகள் அறிந்துள்ளனர். அந்த அரிய கலையை சாமானிய மனிதர் கைகொள்ளும் போது, அவன் சந்திக்க கூடிய மாபெரும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்திய மண்ணில், இப்படிப்பட்ட அரிய சக்திகள் குறித்தோ, சித்தர்களின் அரிய ரகசியங்கள் குறித்தோ இதுவரை யாரும் சொன்னதில்லை. பல்வேறு நூல்கள், ஓலை சுவடிகள் மற்றும் புராணங்கள் உள்ளிட்ட பலவற்றில் இருந்து கண்டுபிடித்த விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறோம்.” என்றார் நடிகரும் இயக்குநருமான அரசர் ராஜா.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் அரசர் ராஜா, முதலில் வேறு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்க இருந்த நிலையில், ஹீரோ கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரே ஹீரோவாகவும் நடித்துவிட்டாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, வேலூர், ஆரணி, சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்றதோடு, வேலூரில் உள்ள பூச்சாண்டிகுப்பம் என்ற காட்டுப் பகுதியில் உள்ள பழைய பிரெஞ்சு கோட்டை ஒன்றிலும் படமாக்கப்பட்டுள்ளது. மிகப் பழமையான இந்தக் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் ‘பயங்கரமான ஆளு’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான படமாக இருந்தாலும், காதல் காமெடி என்று கமர்ஷியலாக உருவாகியிருக்கும் ‘பயங்கரமான ஆளு’ வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.