32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜெய் பீம் – பற்ற வைக்கும் சுடர்

Dinesh R சேலம் Published: 27/10/2021 2 நிமிட வாசிப்பு Updated: 30/11/2021 சினிமா
எழுத்து அளவு:

வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை, தீபாவளி அன்று வெளியாகும் சூர்யாவின் ’ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்கள் மனதில் சுடர் விடச் செய்யவுள்ளது..

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஜெய்பீம் படத்தின் டீஸரே, இப்படம் ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது. குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வழக்கறிஞர் சந்துருவாக நடிக்கிறார் சூர்யா.

படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா உலா வரும் அதே வேளையில், பிரகாஷ் ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், ராவ் ரமேஷ் எனப் பலரும் நடித்திருப்பார்கள். ஒரு நல்ல கதை, பாதி வெற்றியைத் தரும். ஆனால் அதைக் கொண்டு சேர்க்க நல்ல நடிகர்கள் வேண்டும். அப்போது தான் உயிர் கிடைக்கும். ட்ரெய்லரைப் பார்த்தாலே படத்தின் உயிரோட்டத்தை உணர முடிகிறது..

படத்தின் முதல் காட்சி தொட்டு, கடைசிக் காட்சி வரை கேமராவின் மாய வித்தை நம்மைக் கட்டிப் போடும். இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல். இவர் பத்திரிகையாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர். அவர் சூர்யாவின் கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெடல் செய்துள்ளார்.

பரபரப்பான நீதிமன்றக் காட்சிகளைக் காண்பதில் எப்போதுமே திரை ரசிகர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். ஜெய் பீம் படத்தில் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையேயான வாதவிவாதங்கள் நீதிமன்ற அறைக் காட்சிகளாக ஆழமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ட்ரெய்லரில் ஏற்படுத்தும் தாக்கமே அதற்குச் சான்று.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.