32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜெயிலர் 2 விமர்சனம் | Jailer 2 review

Dinesh R சேலம் Published: 15/10/2026 2 நிமிட வாசிப்பு Updated: 22/10/2026 இது புதிது
எழுத்து அளவு:

தமிழ் சினிமாவில் பார்ட்-2 படங்கள் சரியாகப் போகாது என்ற பொதுவான நம்பிக்கையை உடைத்து நொறுக்கியுள்ளார் நெல்சன். ஆம், இப்படம் நெல்சன் நிகழ்த்தியுள்ள ஒரு வரலாற்றுச் சம்பவமாகும்!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஜெயிலரில் டைகர் முத்துவேல் பாண்டியன் அழிக்காமல் விட்ட களைகளைத் தேடி அழிப்பதுதான் இந்த ஜெயிலர் 2-வின் கதை. மூன்று கண்டெய்னர்களில் ரஜினியால் பதுக்கி வைக்கப்பட்ட சிலைகளை மீட்க வேண்டி ரஜினிக்கு வலைவீசுகிறது மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன், எஸ்.ஜே சூர்யா குழு. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் சூழலை தாமாகவே உருவாக்குகிறார் ரஜினி. ஆக, வில்லன் – நாயகன் சந்திப்பில் நடக்கும் எல்லாச் சம்பவங்களும் இதிலும் நடக்கிறது, கூடுதல் சிறப்பாக!

ரஜினி என்ற ஒற்றை மனிதரின் மேனரிசங்களே சாதா காட்சியை ஸ்பெசலாக மாற்றிவிடுகிறது. வயோதிகம் தெரிந்தாலும் அதையே பிளஸ் ஆக்கி பிளாஸ்ட் செய்கிறார் ரஜினி. முதல்பாதி வரை வந்தாலுமே வந்த வரைக்கும் கிடைக்கும் எல்லா ஏரியாவிலும் எகிறி அடித்துள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு. குறிப்பாக நமோ நாராயணயனுக்கும் அவருக்குமான காட்சிகள் அபாரம். யோகிபாபு கவுண்டர்கள் பல இடங்களில் குபீர் சிரிப்பை வர வைக்கிறது. ரம்யா கிருஷ்ணன், மிருணா இருவரும் படத்தின் எமோஷ்னலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். எஸ்.ஜே சூர்யாவிடம் எந்தப் புதுமையும் இல்லை. அது பெரிய குறையாகவும் தெரியவில்லை. மிதுன் சக்ரவர்த்தி, வித்யாபாலன் இருவரும் பின்னியெடுத்துள்ளனர்

விஜய் கார்த்திக் கண்ணன் தரமான விஷுவலை வழங்கியுள்ளார். முதலில் வரும் ட்ரோன் ஷாட் முதல், கடைசியில் வரும் ப்ளைட் ஷாட் வரை அசத்தல் விஷுவல்ஸ்! பாடல்கள் மூலம் ஆல்ரெடி வைப் கொடுத்த அனிருத் பின்னணி இசையிலும் அதை மெயின்டெய்ன் செய்திருக்கிறார்.

பின்பாதியில் போதிய அழுத்தம் திரைக்கதையில் இல்லை. அவற்றைக் குட்டிக் குட்டி மாஸ் மொமென்ட்ஸால் மறக்கடித்துள்ளார் இயக்குநர் நெல்சன். சலிக்கச் சலிக்க ரசிக்க வைத்த முதல்பாதி பல்லிடுக்கில் சிக்கிய கற்கண்டாய் இனிப்பதால், பின்பாதியில் வரும் எந்தக் குறைகளும் உறுத்தவில்லை.

ஒரு பக்கா மாஸ் ஆக்சன் கமர்சியல் படத்தைக் காணத் திரையரங்கிற்கு நம்பிச் செல்லலாம்.

– வெண்பா தமிழ்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.