பங்களாதேஷைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தைக்கு சிக்கலான முதுகுத்தண்டு வளைவு திருத்தல் அறுவை சிகிச்சை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் முதுகுத்தண்டு மருத்துவ நிபுணர்களால் வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. பிறப்பிலேயே முதுகுத்தண்டு வளைந்த அக்குழந்தைக்கு, நாட்கள் செல்லச் செல்ல முதுகுத்தண்டின் சிதைவு அதிகரித்துக் கொண்டே போனது. குறிப்பாக, சிறிது நேரம் விளையாடிய பிறகு குழந்தையின் கால்களில் பலவீனம் ஏற்படத் தொடங்கியது. குழந்தையின் ஆறாவது மாதத்தில், முதுகுத்தண்டில் காசநோய் பாதித்தது.
அக்குழந்தையை வங்காளதேசத்தில் இருந்து, சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வந்தனர். குழந்தையைப் பரிசோதித்த பின், காவேரி இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரைன் அண்ட் ஸ்பைன் (KIBS)-இன் இயக்குநரும், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரும், அவரது மருத்துவ குழுவும், மிகவும் உருக்குலைந்த வளைவால் (Kyphosis), மேல் நெஞ்சுக்கூட்டுக் பகுதி அழுத்தத்திற்கு உள்ளானது தான் இந்த நிலைக்குக் காரணம் என்று கண்டறிந்தனர். குழுவின் மருத்துவ ஆலோசனைக்குப் பின், முதுகுத்தண்டிற்கான திருத்தல் அறுவை சிகிச்சை அக்குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மருத்துவர் கிருஷ் ஸ்ரீதரின் முன்னிலையில், நான்கு அறுவை சிகிச்சையாளர்கள் கொண்ட குழுவால் குழந்தையின் மார்பு சுவர் வழியாக சிக்கலான முதுகுத்துண்டு செயல்முறை (Procedure) செய்யப்பட்டது. முதுகுத்தண்டின் கிட்டத்தட்டச் சரிந்த பாகம் நீக்கப்பட்டு, வளைவு குறைக்கப்பட்ட பின் முதுகுத்தண்டு சீராக்கப்பட்டது. இந்த எட்டு-மணி-நேர அறுவை சிகிச்சை தொடர்ந்த நரம்பியல் கண்காணிப்பின் (neuro-monitoring) கீழ் செய்யப்பட்டது.
“குழந்தைகளுக்கான முக்கிய அறுவை சிகிச்சைகள் வயதில் மூத்தவருக்கானதை ஒப்பிடுகையில் கடினமானது” என்று மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்தார். “இதுபோன்ற காம்ப்லெக்ஸ் ஸ்பைனல் ப்ரோசீஜர்களைச் செய்யும் குழுவிற்கு அனுபவத்துடன் சேர்த்து குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமான படிநிலைகளைப் பற்றிய முழுமையான புரிதல் தேவை” என்று குறிப்பிட்டார்.
“முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சையை எண்ணி யாவரும் இனி அச்சம் கொள்ள தேவையில்லை. மயக்கவியல், கண்காணிப்பு, முதுகுத்தண்டு உள்வைப்புகள், மற்றும் அதிவேக துளைக்கும் கருவி, அறுவைச் சிகிச்சை நுண்ணோக்கி போன்றவற்றை யாவிலும் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், துல்லிய அறுவைச் சிகிச்சைக்குக் குறிப்பாக சிக்கலான செயல்முறைகளுக்கு நல்ல பலனை அளித்துள்ளது” என்று மருத்துவர் கிருஷ் ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஒருவார காலம் அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அக்குழந்தை மீண்டும் சுற்றி ஓடவும் விளையாடவும் தொடங்கிவிட்டது. இதுபோன்ற சிக்கலான முதுகுத்தண்டு உருக்குலைவு திருத்தல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டதை எண்ணி குழந்தையின் பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி மருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புனரமைப்பு, சிறுநீரகவியல் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், மேம்பட்ட கேத் லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதிநவீன வசதிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.