
சோனி YAY! எனும் குழந்தைகளுக்கான சேனலை, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தமிழிலும் ஒளிபரப்பி வருகிறது. அந்தச் சேனலின் புகழ்பெற்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கிக்’ஓ (KickO) என்ற கதாப்பாத்திரம், குழந்தைகளைக் காண முதல் முறையாகச் சென்னைக்கு வந்திருந்தது. கிக்’ஓ எனும் அந்தக் கதாப்பாத்திரம், தனது கிக்களுக்காகவும் (Kicks), அழகான நடன அசைவுகளுக்காகவும் பேர் பெற்றது. நவம்பர் 11, ஞாயிறு அன்று, பெசன்ட் நகரில், சென்னைக் குழந்தைகளுக்குத் தனது நடன அசைவுகளைச் சொல்லிக் கொடுத்து, குழந்தைகளுடன் விளையாடி அவர்களை மகிழ்வித்தது கிக்’ஓ. குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களும் குழந்தைகளாகி, கிக்’ஓ-வுடன் கை குலக்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.