32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Kya Lafda | டபுள் ஐஸ்மார்ட் – பாடல்

Dinesh R சேலம் Published: 29/07/2024 2 நிமிட வாசிப்பு Updated: 30/07/2024 அயல் சினிமா
எழுத்து அளவு:

உஸ்தாத் ராம் பொத்தினேனி, காவ்யா தாப்பர், பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர் ஆகியோரின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் இருந்து, க்யா லஃப்டா என்ற ரொமான்டிக் மெலடி வெளியாகியுள்ளது. க்யா லஃப்டா பாடலைக் கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்படியாகத் துள்ளல் இசையை வழங்கியுள்ளார் மணி ஷர்மா. இந்தப் பாடலில் சரியாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘ஹூக் லைன்’ பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தனுஞ்சய் சீபனா, சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது. பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.

வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்ஸ் மற்றும் புரோமோஷன்ஸ் செய்து வருகிறது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான்-இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

சாம் கே நாயுடு, கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்:-

ராம் பொத்தினேனி
சஞ்சய் தத்
காவ்யா தாப்பர்
அலி
கெட்அப் ஸ்ரீனு.

தொழில்நுட்பக் குழு:-

எழுத்து, இயக்கம் – பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் – பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் – பூரி கனெக்ட்ஸ்
உலகளாவிய வெளியீடு – ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட், நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தலைமை செயல் அதிகாரி – விசு ரெட்டி
இசை – மணி ஷர்மா
ஒளிப்பதிவு – சாம் கே நாயுடு, கியானி கியானெலி
சண்டை இயக்குநர் – கெச்சா, ரியல் சதீஷ்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா
மார்க்கெட்டிங் – ஹாஷ்டேக் மீடியா

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.