32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஸ்வீட் ஹார்ட் | கலகலப்பான அறிமுக அசைவொளி

Dinesh R சேலம் Published: 29/07/2024 1 நிமிட வாசிப்பு இது புதிது
எழுத்து அளவு:

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஸ்வீட் ஹார்ட்’ எனப் பெயரிடப்பட்டு, அத்தலைப்பிற்கான பிரத்தியேக அசைவொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் அசைவொளி வெளியிடப்பட்து.

இந்த அசைவொளியில் நடிகர் ரியோ ராஜ், அருணாசலம், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார், யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தவண்ணம் இருந்து.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.