32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

Dinesh R சேலம் Published: 04/07/2019 2 நிமிட வாசிப்பு Updated: 05/07/2019 சினிமா
எழுத்து அளவு:

Sappani-dream---Vikram

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கமல் ஹாசனின் தயாரிப்பில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்ட நடிகர் விக்ரம், “ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே படத்தை ரீமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில், நாசர் சாரின் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டர் பண்ணியிருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசன் ரொம்பச் சிறப்பா நடிச்சிருக்கிறார்.

படத்தை ரீ ரெக்கார்டிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையாக இசையமைத்துள்ளார். வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப் படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப் படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.