Shadow

“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

vikram hollywood actor-says-kamal

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார்.

“ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டே தொடங்கினோம். இந்தக் கம்பெனிக்கு ராஜ்கமல் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்து தான் அதில் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவைக் கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளாம்.

இந்தப் படத்தை விக்ரமிற்காகக் கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும். ‘யாருய்யா இந்த ஆளு? கண்டிப்பா நல்லா வருவான்’ என மீரா படம் பார்த்துச் சொன்னேன். அப்பொழுது விக்ரம் யாரென எனக்குத் தெரியாது. ஆனால் கான்ஃபிடன்ட்டாக நடித்திருந்தார். கேமிராவை லெஃப்ட், ரைட், லென்ஸைப் பார்க்க ஒரு திறமை வேண்டும். யாரும் சொல்லித் தர இயலாது. அது உள்ளிருந்து வரவேண்டும். விக்ரம், சீயான் விக்ரமாக மாற எடுத்துக் கொண்ட கால அளவு எனக்குப் பிடிக்கவே இல்லை. சேது இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். அதன் பின் அவர் ஸ்டார் ஆகிவிட்டார். அவரைப் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை.

கடாரம் கொண்டான் படத்தை நான் ஜாலியாக ரசித்துப் பார்த்தேன். கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். ஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சீயான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும். நான் படப்பிடிப்பு நடக்கும் போது எந்தப் பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ். நிச்சயமாக இந்தப் படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ராஜ்கமல் நிறுவனம் புத்துணர்ச்சியாக இருப்பதற்குக் கடாரம் கொண்டான் படமும் ஒரு காரணமாக இருக்கும். ஜுலை 19-ஆம் தேதி சந்தோசமான நாள். அன்று கடாரம் கொண்டான் வெளியாகிறது.

மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில் தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. திருவிளையாடல் படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார். ரசிகர்கள் நல்லபடத்தைக் கொண்டாட வேண்டும். விக்ரம் சொன்னார் இங்கிலீஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படிச் சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஏன்னா நாம் அனைவரும் ஆங்கிலப்படம் பார்க்கிறோம். படம் மட்டுமல்ல, நாயகனும் இங்கிலீஷ் படத்தில் வரும் நாயகன் போலவே உள்ளார். ஒரு நாயகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற புருஷ லட்சணத்தோடு இருக்கார். ராஜ்கமல் ஒரு முழுமையான படத்தை எடுத்திருக்கிறது” என்று படக்குழுவினரை வாழ்த்தினார்.