32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாயோன் | கமலின் கடவுள் குறித்த கேள்விக்குப் பதில்

Dinesh R சேலம் Published: 02/06/2022 2 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

பதினான்கு வருடங்களுக்குப் பிறகு, ‘கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்’ என தசாவதாரத்தில் கமல் பேசிய வசனத்திற்குப் பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே.எஸ். ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாயோன்”. படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்குப் பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். 500க்கும் மேலான திரையரங்குகளில் விக்ரம் படத்துடன் மாயோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது.

மேலும் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசியிருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்குப் பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனால் மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன, படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆவலும் அதிகரித்துள்ளது.

“மாயோன்” திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.