32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மாயோன் – 25 நாட்களைக் கடந்த திரைமாயம்

Dinesh R சேலம் Published: 22/07/2022 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என்று கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாகத் திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.

அறிவியலும் புராதனமும் கலந்து கட்டிய திரைக்கதை, அட்டகாசமான இசை, கண்ணைக் கவரும் பிரம்மாண்ட கலையமைப்பு முதலியன மாயோன் படத்தின் சிறப்புகள்.

மாமனிதன், வேழம் படங்களுடன் “மாயோன்” திரைப்படம் வெளியானது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில், இப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து வருகிறது.

மாயோன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளைப் பறைசாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஓர் அதிரடி திரில்லராக மாயோன் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது .

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.