32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

மஹாவீர்யர் – டீசர்

Dinesh R சேலம் Published: 03/04/2022 2 நிமிட வாசிப்பு Teaser
எழுத்து அளவு:

நடிகர் நிவின் பாலி நடிப்பில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை Pauly Jr Pictures மற்றும் Indian Movie Makers சார்பில் நிவின் பாலி, PS சம்னாஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா P அம்பு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் M முகுந்தனின் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். 1983 மற்றும் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக அப்ரித் ஷைனியும், நிவின் பாலியும் இணைந்து இப்படத்தில் பணியாற்றுகிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேன்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைச் சுற்றி, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

>> இசை – இஷான்
>> ஒளிப்பதிவு – விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ்
>> பட்த்தொகுப்பு – மனோஜ்
>> ஒலிக்கலவை – விஷ்ணு கோவிந்த்
>> கலை – அனீஸ் நாடோடி
>> ஆடைகள் – சந்திரகாந்த் & மெல்வி J
>> ஒப்பனை – லிபின் மோகனன்
>> இணை இயக்குநர் – பேபி பணிகர்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.