32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

Dinesh R சேலம் Published: 18/01/2018 2 நிமிட வாசிப்பு Updated: 19/01/2018 சினிமா
எழுத்து அளவு:

MGR Animation movie

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு தேவாவின் பிரபு ஸ்டூடியோஸின் கூட்டுத் தயாரிப்பில், டி.இமான் இசையில், அருள்மூர்த்தி இயக்கும் அனிமேஷன் திரைப்படம் “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) புனைவு அனிமேஷன் கதாபாத்திரம் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் தலைப்பும் கதையும் எம்.ஜி.ஆருடையதேயாகும். இது எம்.ஜி.ஆரின் கனவுப் படம் என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். பதிவிட்டிருந்தார். 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாகக் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.

அக்கனவை நனவாக்கும் வகையில் ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் & வேல்ஸ் நிறுவனங்களின் தலைவருமான ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் தயாராகும் இந்த அனிமேஷன் திரைப்பட விழாவின் படப்பூஜை சென்னை சத்யா ஸ்டுடியோஸில் எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான ஜனவரி 17 ஆம் தேதி அன்று நிகழப்பெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினி, கமல், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் 60’களின் புகழ்பெற்ற பல திரையுலகப் பிரபலங்கள், ஊடக நண்பர்கள் என பலரும் வருகை தந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் நடிகர்களும் புதுவசந்த அரசியல் நண்பர்களுமான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து கிளாப் ஃபோர்டு அடித்தும், எம்ஜிஆர்-ஐசரி கணேஷ் இருவரின் உருவப்படங்களை திறந்து வைத்தும் பூஜையைத் துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆரைப் பற்றிய காணொளியுடனும், “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ” அனிமேஷன் படத்தின் சிறப்பு குறும் டீசருடனும் விழா நிறைவு பெற்றது.

– சிவசங்கர்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.