ஆக்செஸ் ஃப்லிம் ஃபேக்டரி G. டில்லி பாபு தயாரிப்பில், M. சக்திவேல் இயக்கத்தில் பரத் – வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் (Sdn. Bhd.) நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.