Shadow

Tag: Axess Film Factory

‘களவாணி பசங்க’ பாடல் | கள்வன்

‘களவாணி பசங்க’ பாடல் | கள்வன்

Songs, காணொளிகள், சினிமா
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் ரேவா. இந்தப் படத்தில் இருந்து ‘களவாணி பசங்க’ என்ற நான்காவது சிங்கிள் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் எழுதியுள்ளார். அந்தோணிதாசன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். 'குவாட்டர் தெனம் வாங்கப் போறேன்...' எனத் தொடங்கியுள்ள இந்தப் பாடல் வெளியான உடனேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.இந்தப் படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பி...
“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

“பாரதிராஜா அருகில் உட்காரத் தகுதியானவர் வெற்றிமாறன்” – இயக்குநர் லிங்குசாமி

சினிமா, திரைச் செய்தி
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடலாசிரியர் சிநேகன், “ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்குப் பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி. இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்” என்றார். இசையமைப்பாளர் ரேவா, “ 'கள்வன்' படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வா...
மிரள் விமர்சனம்

மிரள் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதற்பாதியில், கதைக்கான அடித்தளத்தை அமானுஷ்யமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல். பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு, அமானுஷ்யமான கனவுகள் துரத்தியவண்ணம் உள்ளன. அந்தக் கனவுகளில் இருந்து, தன் மனைவியை மீட்க வழி தெரியமல் தவிக்கிறார் பரத். 'குலதெய்வம் கோயிலுக்குப் போய் படையல் இட்டால் எல்லாம் சரியாகும்' என பரத்தின் மாமியார் மீரா கிருஷ்ணன் சொல்ல, பரத் தன் மனைவி மற்றும் மகனுடன் கிராமத்திற்குக் கிளம்புகிறார். கிராமத்தில் இருந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் வழியில், அத்துவானக் காட்டில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறார். அவரைச் சூழ்ந்து நெருக்கும் அமானுஷ்ய இடரில் இருந்து பரத்தால், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை. காட்சிகளுக்கு அளித்த கவனத்தை வசனத்திற்கு அளிக்கத் தவறியுள்ளனர். ஹாரர் படத்திற்கான க்ரிப்பிங்கான முதற்பாதியாக இல...
மலேசியாவில் ‘மிரள்’ படம்

மலேசியாவில் ‘மிரள்’ படம்

திரைத் துளி
ஆக்செஸ் ஃப்லிம் ஃபேக்டரி G. டில்லி பாபு தயாரிப்பில், M. சக்திவேல் இயக்கத்தில் பரத் - வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் “மிரள்”. புதுமையான ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் (Sdn. Bhd.) நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்....
ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

ராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்

சினிமா, திரைச் செய்தி
ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீதர் தயாரிப்பில், விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ராம்குமார் இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இந்த படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது."இயக்குநர் ராம்குமார் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையோடு வந்தார். முண்டாசுப்பட்டி இயக்குந்ர் என்பதைக் கேள்விப்பட்ட உடனே அதை ஓகே செய்தார் டில்லி பாபு சார். பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது தான் இப்போதைய மிகப்பெரிய சவால். அதிர்ஷ்டவசமாக ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் கையில் படம் போய் சேர்ந்தது எங்கள் பாக்கியம். சின்ன கம்பெனி என்பதையும் தாண்டி எங்களை ந...
ராட்சசன் விமர்சனம்

ராட்சசன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். குலை நடுங்க வைக்கும் கொலைகள் அவை. புராணங்களில், வரும் ராட்சஷர்கள் யாரும் சைக்கோக்கள் கிடையாது. இதில் வரும் சைக்கோவைச் சித்தரிக்க, ராட்சசன் எனும் சொல் சரியயானதுதானா என்பது ஐயமே! சைக்கோவை எஸ்.ஐ. அருண் எவ்வாறு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. த்ரில்லர் ரசிகர்களுக்குச் செமயான விருந்தளிக்கும் படம். ஆனால் அதே அளவு நடுக்கத்தையும் தருமளவு மிக இன்டன்ஸாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு ஒரு படம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்தானா எனக் கேள்வியெழுமளவு மெனக்கெட்டுள்ளார் முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம் குமார். ஸ்பைடர் படத்திலும் இப்படிக் காட்சிகள் வரும். ஆனால், கவரில் சுற்றப்பட்டுப் பிடுங்கப்பட்ட பள்ளி மாணவியின் கண் குழிக்குள் இருந்து பூச்ச...
மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

மின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்

சினிமா, திரைத் துளி
'முண்டாசுப்பட்டி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்குத் தற்போது 'மின்மினி' என்று தலைப்பு வைத்துள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லிபாபு தயாரிக்கும் 'மின்மினி' படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.வி.ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ.கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ.கீர்த்தி வாசன் என பல திறமையான தொழில் நுட்பக்கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது. 'மின்மினி' படத்தின் தயாரிப்பில் 'ஸ்கைலார்க் மீடியா' ஸ்ரீதர் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. மின்மினியின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. படத்தின் கதைக்கரு, மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாம். மின்மினி தலைப்பைப் படத்தின் கதையோடு ஒரு வகையில் பொருத்...